காமப் பசிக்காக ஒரு பெண் குழந்தையை இரக்கமின்றி கொன்ற கொடூரம்! ஆடிப்போன பொலிஸ் Share

கணவரின் கள்ளக்காதலை நிருத்த விளையாடிக் கொண்டிருந்த 7வயது குழந்தையை கொலை செய்த சம்பவம் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவரின் கள்ளக்காதலை நிருத்த விளையாடிக் கொண்டிருந்த 7வயது குழந்தையை கொலை செய்த சம்பவம் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெருந்துறை அடுத்த, கருமாண்டிச்செல்லிபாளையம், அங்கப்பா வீதியில் வசிக்கும் சண்முகநாதன், கனகா தம்பதியின் மகள் கனி 7 வயது .இந்த குழந்தை நேற்று முன்தினம், வீட்டின் அருகில் உள்ள ஒரு மரத்தின அடியில் உடலில் காயங்களுடன், மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை தொடர்ந்து ,பெருந்துறை போலீசார் சிறுமியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில் சந்தேகம் எழுந்ததால், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சிறுமியின் உடற்கூறாய்வு நடந்தது. இதில் சிறுமி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

சிறுமியின் அக்கம்பக்கத்தினர் வீடுகளில் போலீசார் விசாரணை நடத்த தொடங்கினர். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த ஒரு மூதாட்டி, சிறுமியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் வனிதா என்ற பெண், சிறுமியை தோளில் தூக்கிச் சென்றதைப் பார்த்தாகத் தெரிவித்தார்.இதையடுத்து, வனிதாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது சிறுமியைக் கொலை செய்ததை வனிதா ஒப்புக் கொண்டார்.

வனிதா என்பவர் வேறு சமூகத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பவரைக் காதலித்து, கலப்புத் திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் எட்டு வயதில் ஒரு மகன் உள்ளான்.இருவரும் கருமாண்டிச்செல்லிபாளையம் பகுதிக்கு ஏழு வருடத்திற்கு முன் குடிவந்தனர்.பக்கத்து வீட்டில் வசிக்கும் சண்முகநாதன், கனகா தம்பதி உடன் நட்பாகப் பழகி உள்ளனர்.

கனகாவின் கணவர் சண்முகநாதன் அடிக்கடி குடித்துவிட்டு குடும்பத்தை சரிவர கவனிக்காமல் இருந்துள்ளார்.இந்நிலையில் வனிதாவின் கணவர் கமலக்கண்ணனுக்கும், கனகாவிற்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. கனகாவின் மகள் கனியைத் தன் மகள் போல் நினைத்து கமலக்கண்ணன் செலவு செய்து வந்துள்ளார். இதனால், கமலக்கண்ணனுக்கும், அவர் மனைவி வனிதாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த வனிதா விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கனியை, திண்பண்டங்கள் தருவதாகக் கூறி வீட்டிற்குச் கூட்டிச் சென்று கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். சந்தேகம் வராமல் இருக்க மரத்தடியில் போட்டு வந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து வனிதா மீது கொலை வழக்கு பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..