வாட்ஸ் அப் குரூப்பில் மனைவியின் பெயரை பகிர்ந்தவருக்கு ஏற்பட்ட நிலை? Share

இந்தியாவில் திருமண அழைப்பிதழை வாட்ஸ் குரூப்பில் இளைஞர் ஒருவர் பகிர்ந்ததால், மனைவியின் பெயரை நீங்கள் எப்படி கூப்பிடுவீர்கள் என்று குறித்த இளைஞரை பலர் தொந்தரவு செய்வதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் திருமண அழைப்பிதழை வாட்ஸ் குரூப்பில் இளைஞர் ஒருவர் பகிர்ந்ததால், மனைவியின் பெயரை நீங்கள் எப்படி கூப்பிடுவீர்கள் என்று குறித்த இளைஞரை பலர் தொந்தரவு செய்வதாக கூறப்படுகிறது.
கேரளாவின் கோழிக்கூடு பகுதியைச் சேர்ந்தவர் Vibheesh. இவர் சமீபத்தில் தன்னுடைய திருமண அழைப்பிதழை வாட்ஸ் அப் குடும்ப உறுப்பினர்களின் குரூப்பில் பகிர்ந்துள்ளார்.

அந்த திருமண அழைப்பிதழ் எப்படியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக, அதைக் கண்ட பலரும் Vibheesh-ஐ போனில் தொடர்பு கொண்டு உங்கள் மனைவியின் பெயரை எப்படி அழைப்பீர்கள், அதன் அர்த்தம் என்ன மற்றும் சிலர் அதற்கு உண்மையான அர்த்தம் என்ன என்று கேட்டு தொல்லை செய்துள்ளனர்.
அவர் மனைவியின் பெயர் Dhyanoorhanagithy என்று கூறப்படுகிறது. அவருக்கு மட்டுமின்றி Vibheesh-ன் தந்தையான Velayadhan அவர்களுக்கு தொடர்ந்து போன் வந்தபடியே உள்ளதாம்.

போன் செய்யும் ஒரு சிலர் தவறாக பேசுவதால், பொறுமை இழந்த Vibheesh இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுக்க்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் Dhyanoorhanagithy-ன் தந்தை இலக்கியத்தில் அதிக நாட்டம் கொண்டவராம் அதன் காரணமாகவே இப்படி ஒரு பெயர் வைக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..