வீட்டைப் புனரமைக்கலாம் அல்லது புதிய வீட்டை கட்டலாம் Share

வீட்டைப் புனரமைக்கலாம் அல்லது புதிய வீட்டை கட்டலாம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலவீனமடைந் துள்ளது. இதற்கு கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் தக்க சான்று என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பி னரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறியுள்ளார்.

பொதுவில் கூட்டமைப்புக்குள் குழப்பங்கள், சர்ச்சைகள் ஏற்படும் போதெல்லாம் அவற்றை நிவர்த்தி செய்வதில் பெரும் பங்காற்றியவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித் தார்த்தன் என்றால் அது மறுதலிக்க முடியாத உண்மை.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் அவர்களுக்கு எந்தளவு தூரம் முக்கியத்துவம் கொடுக்கிறாரோ அதேயளவு முக்கியத்துவத் தையும் முதன்மையையும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்க ளுக்கு கொடுப்பதில் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் பின்னிற்கவில்லை.

சுருங்கக்கூறின் கூட்டமைப்பும் இருக்க வேண்டும் வடக்கின் முதலமைச்சரும் இருக்க வேண்டும் என்ற கருத்தியல் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனிடம் உள்ளது.
அதேநேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குள் முரண்பாடான கருத்துக்களை கூறி யாரையும் தர்மசங்கடத்துக்கு ஆளாக்காதவர் என்றால் அதுவும் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனாகவே இருப்பார்.
நிலைமை இதுவாக இருக்கையில்; அவர் இப்போது ஓர் உண்மையை வெளிப்படையாகக் கூறியுள்ளார். அந்த உண்மைதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலவீனமடைந்துள்ளது என்பதாகும்.

மேற்போந்த உண்மையை பாராளுமன்ற  உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர் கள் வெளிப்படையாகக் கூறுவதற்கு முன்பாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தரிடமும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதி ராசாவிடமும் நிச்சயம் எடுத்துரைத்திருப்பார் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
இந்த எடுத்துரைப்பை ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் கூறவும் அவர் பின்னின்றிருக்க மாட்டார்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலவீனமடைந்துள்ளது என்பதை பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த் தன் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறியதன் நோக்கம் கூட்ட மைப்பை பலப்படுத்த வேண்டும் என்பதாகவே இருக்கும்.

எதுவாயினும் கூட்டமைப்பு பலப்பட வேண் டும் என்பதாக இருந்தால் இரண்டு விடயங் களில் ஏதோ ஒன்றைச் செய்வது கட்டாயம்.

அதில் ஒன்று, வீட்டை புனரமைத்து நவக் கிரக சாந்தி செய்தல், இது முடியாது என்றால், புதியதொரு வீட்டைக் கட்டி வாஸ்துசாந்தி செய்து புதிய பாதையில் நேர்மனம் கொண்ட பழையவர்களையும் அழைத்து கிரகப் பிரவேசம் செல்வது.
இதில் வீட்டைப் புனரமைக்க சம்பந்தப்பட்ட வர்கள் விரும்பவில்லை என்றால், அவர்கள் புதிய வீட்டைக் கட்டவும் முன்வரமாட்டார்கள்.

எனவே புதிய வீட்டைக் கட்டும் பணியை; வீட்டைப் புனரமைக்க வேண்டும் என்று உறுதி யாக விரும்புகிறவர்களே செய்தாக வேண்டும்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..