அரை நிமிடத்தில் பிரான்சின் கதாநாயகனாக மாறிய புலம்பெயர் அகதி!! பதற வைக்கும் காட்சி (Video) Share

அகதியாக பிரான்ஸ் நாட்டிற்கு வருகைதந்த 22 வயது இளைஞன், தனது உச்சகட்ட திறமையால் ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றி, ஒரே நாளில் பிராஸின் கதாநாயகனாக மாறியுள்ளார்.

அகதியாக பிரான்ஸ் நாட்டிற்கு வருகைதந்த 22 வயது இளைஞன், தனது உச்சகட்ட திறமையால் ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றி, ஒரே நாளில் பிராஸின் கதாநாயகனாக மாறியுள்ளார்.

பரிஸ் 18 ம் வட்டாரத்தில் உள்ள, ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் 4 வது மாடியிலே, நான்கு வயது குழந்தை ஒன்று தவறி கீழே விழப்போகிறது. ஆனால் தெய்வாதீனமாக அக்குழந்தை ஒரு கம்பியிலே பிடித்து தொங்கிக் கொண்டு இருந்தது. எந்த நேரத்திலும் விழுந்துவிடும் என்கிற நிலை.

அப்போது கீழே இருந்த ஒரு கெபாப் உணவகத்தில் உதைபந்தாட்டப் போட்டியினைக் காண வந்திருந்த ஒரு இளைஞனுக்கு மக்கள் கூக்குரல் இடும் சத்தம் கேட்டது. ஓடிச் சென்று வெளியே பார்த்தான். நிலைமை மோசம்.

உடனே மின்னல் வேகத்தில், வெறும் 32 செக்கன்களில் 4 ம் மாடிக்குத் தாவி ஏறி குழந்தையைக் காப்பாற்றி விட்டான்.

அந்த இளைஞனின் பெயர் Mamoudou Gassama. குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய இந்த இளைஞனின் வீரச் செயல்தான் இன்று பிரான்ஸ் முழுவதும் பேச்சு. ‘பரிசின் ஹீரோ’ என ஊடகங்களும் மக்களும் போற்றிப் புகழ்கிறார்கள். பரிஸ் முதல்வர் ஆன் இதால்கோ ‘ 18 ம் வட்டாரத்தின் ஸ்பைடர்மான்’ என்று புகழ்ந்துள்ளார்.

இந்த இளைஞனுக்கு பிரெஞ்சுக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சருக்கு கோரிக்கைகள் குவிகின்றனவாம்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..