தங்கையைப் பெண் பார்க்க வந்த மாப்பிளை திருமணமான அக்காவுடன் ஓட்டம் பிடித்தார்!! Share

சென்னையில், தங்கையை பெண் பார்க்க வந்தவர், திருமணமான அவரது அக்காவுடன் ஓட்டம் பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூர், ஏகாம்பரம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மூத்த மகள் ஸ்வேதா (26). இவருக்கு திருமணமாகி 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இளைய மகள் ராதிகா (22). இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தது.

அப்போது, அண்ணாதுரை என்பவர் கடந்த ஜனவரி மாதம் திருமணத்திற்கு ராதிகாவை பெண் பார்க்க வந்தார். பெண் பார்த்துவிட்டு சென்ற பிறகு திருமணம் விஷயமாக ராதிகாவின் அக்காவுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசியுள்ளார்.

இதையடுத்து இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஸ்வேதா வீட்டிலிருந்து 5 பவுன் தங்க நகை மற்றும் ரூ.2 லட்சத்துடன் தன் குழந்தையையும் கூட்டிகொண்டு மயிலாப்பூர் லஸ்கார்னர் பகுதியில் காத்திருந்த அண்ணாதுரையுடன் ஓடியதாக தெரிகிறது.

இது பற்றி ராதிகா மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..