இருட்டு அறையில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!! Share

டெல்லியில் 5 மாத கர்ப்பிணி பெண்ணை மாமியாரும்-கணவரும் சேர்ந்து கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.


டெல்லியில் 5 மாத கர்ப்பிணி பெண்ணை மாமியாரும்-கணவரும் சேர்ந்து கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

வரதட்சணை கேட்டு கணவரும், மாமியாரும் சேர்ந்து மருமகளை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.


கொடுமையின் உச்சகட்டமாக, 5 மாத கர்ப்பிணியான மருமகளை பூட்டப்பட்ட ஒரு தொழிற்சாலையின் இருட்டு அறைக்குள் கை-கால்களை கட்டி அடைத்து வைத்து உள்ளனர்.

பின்னர், உங்கள் மகளை காணவில்லை என பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து பெண்ணின் பெற்றோர் பொலிசில் புகார் செய்து உள்ளனர்.

பொலிசார் தேடுதல் வேட்டையில் இருட்டு அறையில் கை-கால்களை கட்டி அந்த பெண்ணை அடைத்து வைத்து இருப்பது தெரியவந்தது. உடனடியாக அந்த பெண்ணை மீட்டு போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது குறித்து கணவன் மற்றும் மாமியார் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்து மாமியாரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள கணவரை பொலிசார் தேடி வருகின்றனர்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..