15 வயதுச் சிறுமியை காதலித்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய காவாலி இவன்!! Share

திருவனந்தபுரம்: பாறசாலை அருகே காதலிப்பதாக கூறி 15 வயது சிறுமியை கடத்தி சென்று நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.


திருவனந்தபுரம்: பாறசாலை அருகே காதலிப்பதாக கூறி 15 வயது சிறுமியை கடத்தி சென்று நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம் பாறசாலை அருகே செங்கல் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (21). கொற்றாமம் பகுதியை சேர்ந்த 15வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சிறுமியிடம் அமரவிளைக்கு வருமாறு அழைத்துள்ளார். அவர் கூறியபடி சிறுமி பஸ்சில் அங்கு சென்றார். அப்போது அரவிந்த் தனது நண்பர்கள் ரெஞ்சித் (25), அகில் (21) ஆகியோர் உதவியுடன் சிறுமியை ஆட்டோவில் கொல்லையில் என்ற இடத்தில் உள்ள அகில் வீட்டுக்கு அழைத்து சென்றார்.

அங்கு வைத்து 3 பேரும் சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் சிறுமியை பஸ்சில் அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து அரவிந்த், அகில், ரெஞ்சித் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..