மருத்துவ மாணவர் திடீர் தற்கொலை! தற்கொலையின் பின்னணி என்ன?? Share

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகிலுள்ள கச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசிரியர் மனோகரன். இவர் தற்போது மானாமதுரை ரயில்வே காலனியில் வசித்து வருகிறார்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகிலுள்ள கச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசிரியர் மனோகரன். இவர் தற்போது மானாமதுரை ரயில்வே காலனியில் வசித்து வருகிறார். இவரது மனைவியும் அரசு ஊழியர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவருமே டாக்டருக்கு படித்து வருகிறார்கள். மூத்த மகன் சிவநாதன் சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் 4 -ம் ஆண்டு படித்து வந்தார்.


இந்நிலையில் திடீரென்று நேற்று இரவு சென்னையில் இருந்து மானாமதுரைக்கு வந்த இவர் தான் விஷம் அருந்தி விட்டதாக தந்தை மனோகரனிடம் சொல்லியிருக்கிறார். உடனே அவரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றிருக்கிறார்கள். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார். மானாமதுரை போலீசார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். ”இன்னும் கொஞ்ச நாளில் மருத்துவராக வரவேண்டியவன். எதற்காக இப்படி செய்தான் என தெரியவில்லை. கிராமத்தில் நடந்த கோயில் திருவிழாவிற்கு வந்த போது கூட மவுனமாகவே இருந்தான்” என அவரது சித்தப்பா தெரிவித்தார். இச்சம்பவம் கச்சநத்தம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..