புதூர் நாகதம்பிரான் வருடாந்த பொங்கல் விழாவில் வெள்ளை நாகபாம்பு வந்ததால் பரபரப்பு!! (Video) Share

(11.06.2018) திங்கட்கிழமை புதூர் ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் பெருவிழாவின் போது நாகம் ஒன்று மூலஸ்தானத்துக்குள் காட்சியளித்துள்ளது..

வவுனியா, புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவத்தின் போது வெள்ளை நாகம் ஒன்று காட்சி கொடுத்து பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் நிகழ்வு நேற்று திங்கட் கிழமை இடம்பெற்றது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாகதம்பிரானை நோக்கி நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். இதன்படி நேற்று இரவு நாகதம்பிரானுக்குரிய பூஜை வழிபாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஆலயத்தினுள் உள்ள தூண் ஒன்றின் மேலிருந்து பக்தர்களை நோக்கி குறித்த நாகம் தலையைத் தொங்கவிட்டுள்ளது. இதனால் ஆலயத்திற்கு வருகை தந்த மக்கள் ஆச்சரியமும் பரவசமும் அடைந்து அந்தப் பாம்பினை நோக்கி அரோஹரா அரோஹரா என ஒலித்தவாறே வழிபட்டனர். எவ்வாறாயினும் சில நிமிடங்களே அங்கு காட்சி கொடுத்த வெள்ளை நாகம் பின்னர் அங்கிருந்து மறைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..