ஊடகவியலாளர் ஒருவர் நடு வீதியில் துப்பாக்கியால் கொலை அச்சுறுத்தல்!! யாழில் பரபரப்பு!! Share

ஊடகவியலாளர் ஒருவர் நடு வீதியில் துப்பாக்கியால் கொலை அச்சுறுத்தல்!! யாழில் பரபரப்பு!!

ஊடகவியலாளர் ஒருவர் நடு வீதியில் துப்பாக்கியால் கொலை அச்சுறுத்தல்!! யாழில் பரபரப்பு!!

யாழ் சட்டநாதர் கோவில் பகுதியில் வைத்து சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் துப்பாக்கியால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.

உடுப்பிட்டிப் பகுதியில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போய் வல்லை வெளியில் இராணுவத்தால் மீட்கப்பட்டதாக கூறப்பட்ட ஜீவசங்கரி எனும் காவாலியும் அவனுடன் வந்த இன்னொருவனுமே குறித்த ஊடகவியலாளரை துப்பாக்கியால் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

அத்துடன்  ஆவா குழு தனது கட்டளைப்படியே இயங்குவதாகவும் தான் உத்தரவு கொடுத்தால் அடுத்த கணம் வீடு புகுந்து உன்னை வெட்டிச் சரித்துவிடுவார்கள் எனவும் அவர்களில் ஒருவன்  அச்சுறுத்தியுள்ளான். உடுப்பிட்டி வீரபத்திரகோவிலடியைச் சேர்ந்த ஜீவசங்கரி எனும் காவாலியுடன் வந்த குறித்த நபருக்கு கைத் துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது? அவன் இராணுவப் புலனாய்வாளனா? என பலத்த சந்தேகம் வெளியாகியுள்ளது.

ஜீவசங்கரி என்பவன் கடத்தப்படவில்லை எனவும் போலியான கடத்தல் நாடகம் ஒன்றை அரங்கேற்றி வெளிநாடு ஒன்றி்ல் அடைக்கலம் பெற முயல்கின்றான் எனவும் எமது இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது. குறித்த ஜீவசங்கரி மற்றும் அவனது குடும்பம் உடுப்பிட்டிப் பகுதியில் பல குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டுள்ளதுடன் அப்பகுதி மக்கள் மத்தியில் தங்களை ஜீவசங்கரி உட்பட்ட குடும்பத்தினர் ரவுடிகளாக அடையாளப்படுத்தி அச்சுறுத்தி வந்துள்ளனர். ஜீவசங்கரி மற்றும் அவனது சகோதரர் ஆகியோ இராணுவத்துடன் யுத்த காலங்களில் நெருங்கிய தொடர்பில் இருந்ததால் அப்பகுதி மக்கள் அவர்களிடத்தில் அச்சம் கொண்டிருந்ததாகத் தெரியவருகின்றது.

இச் சந்தர்ப்பத்தை சாதகமாகப் பயன்படுத்தி பெண்களுடன் பாலியல் சேட்டை செய்வது மற்றும் கஞ்சா, போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணுவது என்பவற்றை ஜீவசங்கரி உட்பட்டவர்கள் அரங்கேற்றி வந்திருந்தனர்.

தற்போது ஆயுதங்களும் தம்வசம் வைத்திருந்து சுதந்திரமாக நடமாடித் திரிவதுடன் ஊடகவியலாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விட்டுள்ளமையும் ஊடகவியலளார்கள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஊடகவியலாளருக்கு துப்பாக்கியால் கொலை அச்சுறுத்தல் விடுத்தமை  தொடர்பாக கோப்பாய் பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

ஊடகவியலாளரை அச்சுறுத்திய காவாலி ஜீவசங்கரி இவன்தான்....

 

 

Image may contain: 1 person

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..