முருகன் பழனிக்குப் போனபோதுதான் நாரதரின் பணி முடிவுற்றது Share

நாரதர் என்றாலே கலகம் ஏற்படுத்துபவர் என்பது அனைவரும் அறிந்தது. ஊர்களில் சிலருக்கு நாரதர் என்று பட்டப் பெயர் சூட்டப்படு வதுமுண்டு.

நாரதர் என்றாலே கலகம் ஏற்படுத்துபவர் என்பது அனைவரும் அறிந்தது. ஊர்களில் சிலருக்கு நாரதர் என்று பட்டப் பெயர் சூட்டப்படு வதுமுண்டு.

கலகத்தை ஏற்படுத்த வல்லவர்கள் என்ப தால் அவ்வாறு பெயர் சூட்டப்படுகிறது.
ஆக, நாரதர் என்றாலே கலகத்தை உண்டு பண்ணுபவர் என்பதுதான் இதனூடு அறியப்படு கிறது.

கலகத்தை ஏற்படுத்தாவிட்டால் நாரதரின் தலை சுக்கு நூறாக வெடித்து விடும் என்று கூறு வார்கள். இது ஓர் உளவியல் சார்ந்த கருத்து.

அதாவது கலகத்தை ஏற்படுத்துவதையே சதா சிந்தனையாகக் கொண்டவருக்கு அத னைச் செய்யாதவிடத்து அது மிகப்பெரிய குழப் பத்தை ஏற்படுத்தும். இதனையே தலை வெடித்து விடும் என்ற சொற்பதம் குறித்து நிற்கிறது.

இவ்வாறாக கலகத்தை ஏற்படுத்துகின்ற நார தர் ஒருமுறை சிவப்பரம்பொருளின் இடத்துக் குச் செல்கின்றார். அவரின் கையில் ஒரு மாங்கனி.
அந்த மாங்கனியை சிவனிடம் கொடுத்து இது அற்புதமான மாங்கனி. இந்த மாங் கனியை ஒருவர் மட்டுமே சாப்பிட வேண்டும்.

ஆகையால் இதனை விநாயகனுக்கா அல் லது முருகனுக்கா கொடுப்பது என்பதை நீங் களே தீர்மானியுங்கள் என்கிறார் நாரதர்.

மாங்கனியைப் பங்கிட்டு உண்ணுங்கள் என் றால், கலகத்துக்கு இடமில்லை. கலகம் ஏற்பட வேண்டுமாயின் இரு பிள்ளைகளில் ஒருவ ருக்கே மாங்கனியைக் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை கட்டாயமானதாகும்.

அந்த நிபந்தனையுடன் சிவப்பரம்பொருளின் வீட்டிலேயே கலகத்தை ஏற்படுத்தி விடுகிறார் நாரதர்.
மாங்கனி யாருக்குரியது என்பதைத் தீர் மானிப்பதற்காக உலகம் சுற்றும் போட்டியை சிவன் அறிவிக்கின்றார்.

இந்த உலகத்தை யார் முதலில் சுற்றி வரு கிறார்களோ அவர்களுக்கே இம்மாங்கனி என்று சிவன் அறிவித்துவிட,
முருகப் பெருமான் மயில் மீதேறி உலகம் சுற் றப் புறப்பட்டார்.  விநாயகனோ நிதானமாகச் சிந் திக்கின்றார். நம்மைப் பெற்ற தாய் தந்தையரை விட வேறு உலகம் உண்டா?

சந்தேகத்தைத் தெளிவுபடுத்திக் கொண்டு, அம்மை அப்பனை மூன்று முறை வலம் வந்து  மாங்கனியைப் பெற்றுக் கொள்கிறார்.
உலகத்தைச் சுற்றி வந்த முருகன் மாங் கனி தன் அண்ணன் விநாயகனின் கையில் இருப்பதைக் கண்டு குழப்பமடைகிறார்.

இந்தக் குழப்பத்தைக் கூறுவதற்கு முன்ன தாக; அம்மை அப்பனைச் சுற்றி வந்தால், உல கத்தை சுற்றுவதற்கு ஈடாகும் என்ற செய்தி நம் தமிழினத்துக்கு அழுத்திச் சொல்லப்பட வேண்டும்.

ஏனெனில் பெற்ற தாய் தந்தையரை பரா மரிக்காமல், அவர்களை முதியோர் இல்லங் களில் விட்டுவிட்டு உலகம் சுற்றித் திரிவதால் எந்தப் பயனும் இல்லை. அது தர்மமன்று.
ஆக, பெற்ற தாய் தந்தையரைப் பேணிப் பாதுகாத்தாலே, அதுவே இந்த உலகம் முழு மையும் சுற்றி வந்த திருப்தியைத் தரும்.
இந்த உன்னதமான கருத்து இங்கு வலி யுறுத்தப்படுகிறது. இதுபற்றி நாம் உணர்தல் நன்று.

தவிர, இப்போது முருகன் கோபம் கொண்டு கெளசனதாரியாக பழனிக்குச் செல்கிறார்.
பிள்ளையைப் பிரிந்த துயரில் சிவப்பரம் பொருளின் குடும்பம் அந்தரிக்கிறது. நாரதரோ தன் பணி முடிந்து விட்டது எனக் கூறி அங்கி ருந்து வெளியேறுகிறார்.
நாரதர் வந்தது சிவனின் வீட்டைக் குழப்ப, அது நடந்துவிட்டது. வந்த வேலை முடிந்து விட் டால், பதவியைத் துறப்பது அவ்வளவொன்றும் பெரிய காரியமல்ல.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..