முல்லைத்தீவில் நுண்கடன் நிதிநிறுவனங்களின் அட்டகாசத்துக்கு எதிராக பெண்கள் பேரணி!! (Photos) Share

முல்லைத்தீவு மாவட்டத்தில் போருக்குபின்னர் குறிப்பாக பெண்கள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சனையான நுண்நிதிக்கடன் திட்டங்களுக்கு எதிராகவும் நுண் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு எதிராகவும் அமைதியான முறையில் மக்கள் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றினை இன்று (14) காலை முன்னெடுத்துத்திருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் போருக்குபின்னர் குறிப்பாக பெண்கள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சனையான  நுண்நிதிக்கடன் திட்டங்களுக்கு எதிராகவும் நுண் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு எதிராகவும்   அமைதியான முறையில் மக்கள் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றினை இன்று (14) காலை முன்னெடுத்துத்திருந்தனர்.


 
இதில் குறிப்பாக முல்லைத்தீவு நகர்பகுதியில் நுண்நிதி கடன் வழங்கும் நிறுவனம் ஒன்றின் முகாமையாளர் உட்பட உத்தியோகஸ்தர்கள் அனைவரும் இணைந்து  ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ள பெண்களை ஒளிப்படம் எடுத்து அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் விசனம் தெரிவித்தனர்.


 


நுண்நிதி கடன் செயற்பாட்டினால் அசௌகரியங்களை எதிர்நோக்கும் சமூகங்களை பாதுகாக்கம் நோக்கில் குறிப்பாக பெண்களை பாதுகாக்கவும், இந்நுண்நிதிக்கடன் செயற்பாட்டில் பொறிக்குள் சிக்கி இருக்கும் மக்களை விடுவிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளவும் அரசாங்கத்திற்கும் இலங்கை மத்திய வங்கிக்கும் தொடர் அழுத்தம் கொடுக்கும்வகையில் வடக்கில் சில மாவட்டங்களில் கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை இன்றையதினம் மேற்கொண்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்ட சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் சிவில் சமூக வலையமைப்பின் ஏற்பாட்டில் இன்று காலை முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில் இருந்து கவனயீர்ப்பு பேரணியாக முல்லைத்தீவு நகர் பகுதி ஊடாக மாவட்ட செயலத்தினை மக்கள் சென்றடைந்துள்ளார்கள்.


 
இவ்வாறு ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட மக்களை முல்லைத்தீவு நரில் இயங்கிவரும் பிரபலமான  ஒரு நுண் கடன் வழங்கும் நிறுவனத்தின் ஊழியர்கள் ஒளிப்படம் எடுத்து பெண்களை அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்கமுடிந்துள்ளது. இதனை போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அவதானித்து தாம் குறித்த நிறுவனத்தில் கடன்களை பெற்றுள்ளதாகவும் இவ்வாறு நுண்கடன் திட்டங்களுக்கு எதிராக ஆர்பாட்டம் மேற்கொள்ளும் போது குறித்த நிறுவனத்தினர் தம்மை அச்சுறுத்தும் விதமாக புகைப்படம் எடுத்து நடந்து கொண்டதாக கவலை தெரிவித்தனர்.

இனிவரும் நாட்களில் இந்த புகைப்படங்களை வைத்து குறித்த நிறுவனத்தில் தாம் பெற்ற கடன்களை திருப்ப செலுத்தும்போது அந்த நிறுவன ஊழியர்களால் அழுத்தங்களுக்கு உட்படுத்த படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களில் சிலர்  தெரிவித்தனர்.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகர்பகுதியில் 8க்கு  மேற்பட்ட நுண்நிதி கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றன.இதனால்  நாள்தோறும் பல பெண்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றார்கள். குறிப்பாக இவ்வாறு கடன் வழங்கும் நிறுவனங்கள் பெண்களிடம் சென்று குழுக்களாக சேர்த்து ஆசை வார்தை காட்டி கடன்களை வழங்கிவருவதாக பெண்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள். இந்த நிறுவனங்களின்  முகவர்களாக செயற்படும் கடன் அறவிடும் ஊழியர்கள் பலர் பல பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளதையும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

https://scontent.fcmb1-1.fna.fbcdn.net/v/t1.15752-0/p280x280/35414396_260649911177771_614962509887045632_n.jpg?_nc_cat=0&oh=76ae5fa1a4d08c415a588859f6f673de&oe=5BC4A252https://scontent.fcmb1-1.fna.fbcdn.net/v/t1.15752-0/p280x280/35204882_260650017844427_3112156100368007168_n.jpg?_nc_cat=0&oh=d051d981877cfed1d98859edb47dfc75&oe=5BB518C8

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..