திருமணமான ஆண்கள் வேறு பெண்களிடம் உறவு வைப்பதற்கு இதுதான் காரணம் Share

இப்ப இருக்கும் காலக்கட்டத்தில் நல்ல காதல் எது? கள்ளக்காதல் எது என்ற அளவிற்கு ஒரு பட்டி மன்றமே வைத்து விடலாம்…

இப்ப இருக்கும் காலக்கட்டத்தில் நல்ல காதல் எது? கள்ளக்காதல் எது என்ற அளவிற்கு ஒரு பட்டி மன்றமே வைத்து விடலாம்…

அந்த அளவிற்கு திருமணமான நபர்கள் முதல் திருமணம் ஆகாத நபர்கள் வரை யாரு யாருடன் உறவு வைத்துள்ளர்கள் என்பது பெரும் கதையாக மாறி வருகிறது …

அதையும் தாண்டி தினமும் நான் செய்தித்தாள்களில் பார்ப்பது..கள்ளக் காதல், கொலை கற்பழிப்பு என தொடர் கதையாக மாறி வருகிறது.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, திருமணமான ஆண்களுக்கு எதற்காக மற்ற பெண்கள் மீதோ அல்லது வேறு ஒரு பெண் மீதோ ஆர்வம் ஏற்படுகிறது என்ற கோணத்தில்அலசி ஆராயப்பட்டு உள்ளது.

அதே போன்று, திருமணமான பெண்கள் மீது ஆண்கள் ஆசைப்படுவதற்கு வேறு சில காரணங்கள் கூறப்பட்டாலும், திருமணமான ஆண்கள் ஏன் வேறு பெண்ணிடம் ஆர்வம் காட்டுகிறார் என்பதற்கு சில காரணங்கள் கூறப்பட்டு உள்ளது

அதன்படி,

கவன ஈர்ப்பு

எத்தனை வருட உறவாக இருந்தாலும் சரி ஒரு ஆண் பெண்ணிடம் எதிர்பார்ப்பது எப்போதுமே தன் மீது தனி கவனம் இருக்க வேண்டும் என்பதே…. அதாவது சரி கல்யாணம் ஆயுடுச்சி அப்புறம் என்ன என்ற அளவில் பெண்கள் நடந்துக்கொண்டால், ஆண்களுக்கு ஒரு கணவராக தன் மனைவியிடம் தம்மை பற்றி எந்த ஒரு தனி கவனமும் இல்லையே என்ற ஏக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது

இது போன்ற ஒரு தருணத்தில், வேறு யாரவது ஒரு பெண் கொஞ்சம் அக்கறை கான்பிப்பது போல் பேசினாலே போதும், அவர்களின் கவனம் சற்று திசை திரும்ப தொடங்கி விடுகிறது என்கிறது ஆய்வு

வேறு பெண்ணுடன் நேரத்தை செலவழிக்க தோன்றுவது எதற்கு தெரியுமா..?

நாள் முழுக்க வேலை செய்துவிட்டு கொஞ்சம் டென்ஷனாக வீட்டிற்கு வரும் கணவர், மனைவி மக்களோடு பேசி பழகி சுவாரஸ்யமாக நேரத்தை செலவழிக்க வேண்டும் என வருவார்கள்…ஆனால் அதற்கு மாறாக எந்த ஒரு சுவாரஸ்யமும் இல்லாமல், தன் மீது ஆர்வம் இல்லாதவாறு கண்டுக்கொள்ளாமல் இருந்தால், அந்த நேரத்தில் வேறு எந்த பெண் நம்முடன் பேச ஆர்வம் காட்டினார் என்ற எண்ணத்திற்கு சென்ற அவர்களுடன் மெசேஜ் செய்வது போன் செய்வது என தொடங்குகிறார்களாம்.

சந்தோசம் தான் முக்கியம்

ஆண்கள் எப்போதும் பெண்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். அந்த வகையில் தன் துணையுடன் சந்தோஷமாக இருக்க நினைக்கும் சமயத்தில், தன் துணை அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், தட்டிக்கழித்து விட்டால்….அந்த சமயத்தில் ஆண்களுக்கு ஒரு விதமான எண்ணம் வர தொடங்குகிறதாம்…அதாவது எந்த பெண் நம்முடன் இருந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என நினைக்கிறாள்…அதே போன்று நம்மையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்கிறார் என்ற பாணியில் அலசி ஆராய்ந்து தன் மனதில் ஒரு கோட்டை கட்ட தொடங்கி விடுகிறார்களாம்…

இதற்காக தான் அந்த காலத்தில், புருஷனை முந்தானையில் முடித்து வைத்துக்கொள்ள வேண்டும் என மனைவியிடம் சொல்வார்களாம்..

பெண்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் கொண்ட ஆண்கள்….

உதவி என்று ஒரு பெண் தன்னை மதித்து கேட்டு விட்டால், ஆண்களுக்கு அப்படியே தான் பெரிய ஹீரோடா என்கிற அளவிற்கு எண்ணம் இருக்குமாம்.

தெரிந்தோ தெரியாமாலோ ஒரு பெண் தன்னிடம் உதவி கேட்கும் போது, அது அவர்களால் முடிகிறதோ இல்லையோ..எப்படியாவது அந்த உதவியை அந்த பெண்ணிற்காக செய்து விட வேண்டும் என எண்ணி அதற்கான அனைத்து முயற்சியையும் எடுப்பார்களாம் ஆண்கள்….

அதாவதுங்க…பெண்கள் மனதில் ஹீரோவாக நிலைத்து இருக்க வேண்டும் என்பதற்காக ……

விளையாட்டில் ஆர்வம் காட்டும் பெண்களை தான் ரொம்ப பிடிக்குமாம்…….

அதாவது ஆண்கள் எப்போதுமே வாழ்கையில் ஒரு படி மேலே இருக்க வேண்டும்..ஜெயிக்கனும் என நினைப்பார்கள்.. அவர்களால் சிறு சிறு தோல்வியை கூட தாங்க முடியாமல் போகும்

அதே போன்று எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும், அதனை மிக எளிதாக ஈசியாக எடுத்துக்கொண்டு வாழ்கையை நகர்த்தி செல்வார்கள்….

எனவே தான் அவர்கள் விளையாட்டிலும் அதிக ஆர்வம் காட்டுவார்கள்….அதே போன்று, விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டும் பெண்களை ஆண்களுக்கு அதிகம் பிடிக்குமாம்…

இருவரின் மன நிலைமையும், எண்ணமும் ஒன்றி போவதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது

நாடகங்கள் பிடிக்காத ஆண்கள்…

நீங்கள் யாரை வேண்டுமானாலும் கேட்டு பாருங்கள்..ஆண்களுக்கு சீரியல் என்றாலே அந்த அளவிற்கு பிடிக்காது… சொல்லப் போனால், தன் மனைவி வீட்டில் சீரியல் பார்ப்பதை கூட அவர்கள் விரும்ப மாட்டார்கள் காரணம்.. சீரியல் பார்க்கும் பெண்களிடம் அதிக செண்டிமெண்ட் காணப் படும்….உண்மை வாழ்க்கை எது என்று புரியாத அளவிற்கு ….. நாடகங்களில் வருவது போல காதல் கொள்ள வேண்டும்.. அது போன்றே சென்டிமெண்டாக வாழ வேண்டும்… தனி குடித்தனம் போக வேண்டும்.. மாமியார் என்றால் இப்படி தான் இருப்பார்கள்..எனவே குறைகூறி கொண்டே இருக்க வேண்டும் என நினைப்பார்கள்,….

இதனை எல்லாம் அறிந்துக்கொண்டுள்ள ஆண்கள், பெண்கள் சீரியல் பார்ப்பதை கூட வெறுக்க செய்வார்கள்….

மொத்தத்தில் ஆண்களுக்கு என்ன வேண்டும் என்றால், உழைக்க வேண்டும், விளையாட வேண்டும் … கொஞ்சம் ஜாலியாகா இருக்க வேண்டும்…. வெளியில் கொஞ்ச ஊர் சுற்ற வேண்டும். நண்பர்களுடன் பேசி பழக வேண்டும்…. இதில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் தான் ஆண்கள் பலரும் கொஞ்சம் தடுமாற செய்கிறார்கள் என்கிறது கருத்து கணிப்பு ….

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..