மனைவியை கொன்றுவிட்டு இரத்தக்கறையுடன் காவல்நிலையம் சென்ற கணவன்!! Share

மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்ட கணவன் மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்று விட்டு குழந்தைகளுடன் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்ட கணவன் மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்று விட்டு குழந்தைகளுடன் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கொண்டம நாயக்கன்பட்டி சத்யா காலனி பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேற்குறித்த பகுதியைச் சேர்ந்த சிவமுருகன் என்பவர் அரசு போக்குவரத்துக்கழகத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார்.

இவரது முதல் மனைவி உடல்நலக் குறைவால் இறந்து விட்டதால், 3 ஆண்டுகளுக்கு முன்னர் புள்ளக்காபட்டி கிராமத்தைச் சேர்ந்த கல்யாணப்பிரியா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு வயதிலும், இரண்டு வயதிலும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், மனைவி கல்யாணப்பிரியாவின் நடத்தை மீது சந்தேகம் வந்தமையினால் அடிக்கடி அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக முற்றியுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த சிவமுருகன், மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கல்யாணப்பிரியா, துடிதுடித்து இறந்தார்.

இதையடுத்து, தனது இரண்டு குழந்தைகளுடன் ஆண்டிப்பட்டி காவல்நிலையத்திற்கு சென்று சரணடைந்தார்.

இதையடுத்து ரத்த வெள்ளத்தில் பிணமாகிக் கிடந்த கல்யாணப்பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொலிசார் அனுப்பி வைத்தனர்.

இரு குழந்தைகளையும், சிவமுருகனின் பெற்றோரிடம் ஒப்படைத்த காவல்துறையினர், கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..