ஆட்டாமா உணவுகள் உடல் நிறையை கட்டுப்படுத்த உதவுமா? – Dr.சி.சிவன்சுதன் Share

ஆட்டாமா என்பது கோதுமை அரிசியை தீட்டாது தவிடு சேர்த்து திரிப்பதன் மூலம் பெறப்படுகிறது. பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வரும் இந்த ஆட்டாமாவை பலரும் ஆர்வத்துடன் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆட்டாமா என்பது கோதுமை அரிசியை தீட்டாது தவிடு சேர்த்து திரிப்பதன் மூலம் பெறப்படுகிறது. பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வரும் இந்த ஆட்டாமாவை பலரும் ஆர்வத்துடன் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆட்டாமா உணவுவகைகளை உண்டால் உடல் மெலியும் என்று நம்பி தமது அன்றாட உணவில் அதிகளவு ஆட்டாமாவை சேர்த்து ரொட்டியாகவும் பிட்டு ஆகவும் உண்டு உடல் பருத்துப் போனவர்கள் பலர்.

கோதுமை அரிசியை தீட்டியபின் திரிப்பதன் மூலம் பெறப்படும் கோதுமை மாவுடன் ஒப்பிடும் பொழுது ஆட்டாமாவிலே தவிட்டுத்தன்மையும் நார்த்தன்மை யும் அதிகமாக காணப்படுகிறது.

இதனால் ஆட்டாமா உடலினுள் அகத்துறிஞ்சப் படும் வேகம் ஒப்பீட்டளவிலே சற்றுக் குறைவாகும். ஆனால் குறைந்த வேகத்திலே ஆட்டாமாவில் இருக்கும் மாப்பொருள் அனைத்தும் அகத்துறிஞ்சப்பட்டு உடலினுள் செல்லும். எனவே உடல்நிறை குறைப்பிற்கு ஆட்டாமா உணவு வகைகள் உகந்தவை
அல்ல.

சாதாரண நிறையுடைய நீரிழிவு நிலை உள்ளவர்களுக்கு கோதுமைமாவுடன் ஒப்பிடும் பொழுது ஆட்டாமா சிறந்தது எனக் கொள்ளலாம். ஆனால் எமது பிரதேசங்களில் விளையும் உழுந்து, பயறு, கெளப்பி, பருப்பு வகைகள் போன்றவை ஆட்டாமாவுடன் ஒப்பிடும் பொழுது எமது உள்ளூர் உற்பத்திகள் பல வழிகளிலும் சிறந்தவை ஆகும்.

தீட்டாத தவிடு சேர்க்கப்பட்ட ஊர் அரிசிமா வகைகளும் ஆட்டாமாவுக்கு ஒப்பானவை. எனவே நாம் உள்ளுரில் விளையும் உணவுவகைகளுக்கு முன்னுரிமை கொடுப்பது பயனுடையதாக அமையும்.

Dr.சி.சிவன்சுதன்
பொது வைத்திய நிபுணர்

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..