சாராய வெறியில் மோட்டார் சைக்கிள் ஓட்டியவர்களுக்கு யாழ் நீதிமன்றில் நடந்த கதி!! Share

மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய குற்றச்சாட்டில் இருவருக்கு எதிராக யாழ்ப்பாண பொலிஸாரால் கடந்த ஆண்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய குற்றச்சாட்டில் இருவருக்கு எதிராக யாழ்ப்பாண பொலிஸாரால் கடந்த ஆண்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

அவர்கள் இருவரும் குற்றத்தை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் நீதிமன்றால் தண்டப்பணத்துடன் 200 மணித்தியாலங்கள் சமுதாய சீர்திருத்த பணியில் ஈடுபடுமாறும் கட்டளையிடப்பட்டது.

இவ்வாறிருக்கையில் அவர்கள் இருவரும் 100 மணித்தியாலங்கள் மட்டுமே சமுதாய சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டிருந்தனர் என சமுதாயம்சார் சீர்திருத்த அலுவலகரால் கடந்த தவணையின் போது நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.

எனினும் அன்றைய தினம் குற்றவாளிகள் இருவரும் மன்றில் முன்னிலையாகவில்லை. அதனால் அவர்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று பிடியாணை பிறப்பித்திருந்தது.

குற்றவாளிகள் இருவரும் தமது சட்டத்தரணி ஊடாக இன்று நீதிமன்றில் சரணடைந்தனர்.

வழக்கை விசாரணை செய்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன்,
குற்றவாளிகள் இருவரும் சமுதாய சீர்திருத்த பணிக்கு ஒழுங்காக சமூகமளிக்காததுடன் நீதிமன்றுக்கும் சமூகமளிக்கவில்லை. அதனால் இருவருக்கும் 3 வாரங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்குமாறு கட்டளையிட்டார்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..