மாவா போதைப்பொருளை வைத்திருந்தவருக்கு 3 மாத சிறை - யாழ்.நீதிமன்று தீர்ப்பு Share

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் வைத்து 70 பக்கற்றுக்களில் பொதியிடப்பட்ட 30 கிராம் எடையுடைய கஞ்சா கலந்த மாவா போதைப் பொருளை பொலிஸார் மீட்டனர். அதனை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் வைத்து 70 பக்கற்றுக்களில் பொதியிடப்பட்ட 30 கிராம் எடையுடைய கஞ்சா கலந்த மாவா போதைப் பொருளை பொலிஸார் மீட்டனர். அதனை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் 2017ஆம் ஆண்டு இறுதியில் இடம்பெற்றது.

அவருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர். சந்தேகநபர் குற்றத்தை ஏற்றுக்கொள்ள மறுத்ததால், அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அத்துடன், அவரிடம் மீட்கப்பட்ட மாவா பக்கற்றுக்களை அரச பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பி பரிசோதனை அறிக்கையைப் பெறுமாறு நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டது.

சந்தேகநபர் மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அவருக்கு எதிரான குற்றப்பத்திரம் மன்றினால் வாசித்துக் காண்பிக்கப்பட்டது.

சந்தேகநபர் சுற்றவாளி என மன்றிரைத்தார். அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியும் வழக்கை விளக்கத்துக்கு எடுக்க மன்றில் விண்ணப்பம் செய்தார்.

மன்று: சுற்றவாளி என்றால் பொலிஸாரால் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட சான்றுப்பொருள் உமது உடமையிலிருந்து மீட்கப்படவில்லையா?

சந்தேகநபர்: எனது உடமையிலிருந்துதான் மீட்கப்பட்டது.

மன்று: அப்படியானால் எப்படி சுற்றவாளி என்கிறீர்கள்?

சந்தேகநபர்: கஞ்சா போதைப்பொருள் அதில் இருக்கவில்லை.

மன்று: இல்லையே. அரச பகுப்பாய்வு அறிக்கையில் கஞ்சா கலந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதே?

சந்தேகநபர், சந்தேகநபரின் சட்டத்தரணி சரியான வகையில் பதிலளிக்காமல் தடுமாற்றம்.

சந்தேகநபரின் பதிலில் அதிருப்தியடைந்த நீதிமன்று, அவர் மீதான குற்றச்சாட்டு நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பளித்தது.

எதிரி குற்றவாளியாக இனங்காணப்பட்டு மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது என்று யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் தண்டனைத் தீர்ப்பளித்தார்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..