காவாலிகளால் மாணவி தாக்கப்பட்டதால் கிளிநொச்சியில் பதற்றம்!! (Photos) Share

கிளிநொச்சி பகுதியிலுள்ள பாடசாலைக்கு அருகில் மதுபேதையிலிருந்து இளைஞர்கள் குழுவொன்று மாணவியை தாக்கியமையை கண்டித்து குறித்த பாடசாலையின் மாணவர்கள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.கிளிநொச்சி பகுதியிலுள்ள பாடசாலைக்கு அருகில் மதுபேதையிலிருந்து இளைஞர்கள் குழுவொன்று மாணவியை தாக்கியமையை கண்டித்து குறித்த பாடசாலையின் மாணவர்கள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கிளிநொச்சி கனகாம்பிக்கைக்குளம் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் மாலை நேர வகுப்பினை முடித்து விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தவேளை மதுபோதையிலிருந்து குழுவொன்று மாணவி மீது தகாத வார்த்தை பிரயோகம் மேற்கொண்டதுடன் மாணவியை தாக்கியுமுள்ளனர்.

இச் சம்வபவத்‍தை தனது பெற்றோரிடம் சொன்னபோது மாணவியின் தந்தை சம்பவ இடத்திற்கு விஜயம் செய்து குறித்த குழுவுடன் விசாரணைகளை மேற்கொண்டு வீடு திரும்புகையில் மதுபோதையிலிருந்த இளைஞர்கள் குழு மாணவியின் வீட்டினுள் புகுந்து பொருட்களை சேதமாக்கியதுடன் வீட்டில் இருந்தவர்களையும் தாக்கியுள்ளனர்.

இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலயைத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை கைதுசெய்த பொலிஸார் அவர்கள‍ை இருவரையும் உடனே விடுவித்துள்ளனர்.

இதனை கண்டித்தே குறித்த பாடசாலையின் மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளை புறக்ணித்து இன்று காலை ஆர்ப்பாட்ட்டத்தில் ஈடுபட்டனர்.

Image may contain: one or more people, crowd, tree, shoes, child and outdoor

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..