இன்றைய ராசிப் பலன்கள் 29.05.2014 Share

மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புதிய வரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் முக்கிய அலுவல் களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. அவசர முடிவுகளை தவிர்க்கப்பாருங்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறை கூறுவார்கள். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.

 

மிதுனம்: கணவன்-மனைவிக் குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். உறவினர், நண்பர்களில் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


கடகம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டு வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக்கொள்வார்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.


சிம்மம்: சொன்ன சொல் லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது சலுகை களை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். சாதிக்கும் நாள்.


கன்னி: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.


துலாம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சிக்க லான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக் காதீர்கள். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வேலைச்சுமை மிகுந்த நாள்.

விருச்சிகம்: பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப் பார்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..