யாழில்.சாகச விளையாட்டுக்களை மேம்படுத்தும் வேலைத்திட்டப் பணிகள் ஆரம்பம் Share

சாகச விளையாட்டுக்களை யாழ்.மாவட்டத்தில் மேம்படுத்தும் நோக்கிலான வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

இன்று காலை 8.45 மணியளவில் பழைய பூங்காவில் இந்த சாகச விளையாட்டுக்களை அமைப்பதற்கு ஆரம்ப கட்டமாக அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெற்றது.


இந்நிகழ்வுக்கு வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார்.

மேலும் இந்ந சாகச விளையாட்டுக்களை யாழ். மாவட்டத்தில் மேம்படுத்தி சிறுவர்ளை சாகச வீரர்களாக மாற்றும்
நடவடிக்கையே இதுவாகும்.

இந்த வேலைத்திட்டம் இன்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு இந்த விளையாட்டுக்களுக்கான வேலைத்திட்டம் பூரணப்படுத்தப்பட்டு ஜீலை 1ம்திகதி இந்த சாகச விளையாட்டுக்கள் சாகசமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

மேலும் இந்த வேலைத்திட்டத்தில் சாரணியர்களையும் ஈடுபடுத்தி அவர்களூடே சிறுவர்கள் இந்த சாகச விளையாட்டில்
ஈடுபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..