தங்கூசி வலைகள் அழிக்கப்பட்டன Share

யாழ்.நாவாந்துறை மற்றும் கொட்டடிப் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளை அழிக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறையினருக்கு இன்று வியாழக்கிழமை (29) உத்தரவிட்டார்.

 

அதற்கமைய குறித்த தங்குகூசி வலைகளை கொட்டடிப் பகுதியில் குப்பைகள் எரிக்கும் இடத்தில் வைத்து எரித்ததாக யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறை பிரதிப்பணிப்பாளர் நடராஜா கணேசமூர்த்தி தெரிவித்தார்.

யாழ்.கொட்டடி மற்றும் நாவாந்துறைப் பகுதிகளிலிருந்து தடை செய்யப்பட்ட 4 தொகுதி தங்குகூசி வலைகளினை இன்று வியாழக்கிழமை (29) காலை யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறையினரால் மீட்கப்பட்டது.   
                         
நாவாந்துறைப் பகுதியிலிருந்து 3 தொகுதி வலைகளும், கொட்டடிப் பகுதியிலிருந்து 1 தொகுதி வலைகளுமே இவ்வாறு மீட்கப்பட்டன. இருந்தும் குறித்த வலையினை எவரும் உரிமை கோரியிருக்கவில்லை.

தொடர்ந்து குறித்த வலைகளை யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்திய போதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..