டைனமைற் வெடிவைத்த பிடித்த மீன்களை வைத்திருந்த இருவருக்கு பிணை Share

யாழ்.சாவற்கட்டுப் பகுதியில் டைனமைற் வெடி வைத்துப் பிடிக்கப்பட்ட மீன்களை வைத்திருந்த இருவரையும் தலா 2 இலட்சம்

 ரூபா பிணையில் செல்ல அனுமதியளித்த மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சி.சதீஸ்கரன், மீன்களை அழிக்கும்படி யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறையினருக்கு இன்று வியாழக்கிழமை (29) உத்தரவிட்டார்.

சாவற்கட்டுப் பகுதியில் வைத்து, நேற்று (28) இரவு கைது செய்யப்பட்ட மேற்படி இருவரையும் இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

டைனமைற் வெடி வைத்து பிடிக்கப்பட்ட மீன்களை பொதி செய்துகொண்டிருந்த இருவரை யாழ்.சாவற்காட்டுப் பகுதியில் வைத்து நேற்று புதன்கிழமை (28) இரவு யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறையினர் கைது செய்தனர்.

நீரியல் வளத்துறையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்குச் சென்று, இருவரையும் பிடித்ததுடன், டைனமைற் வெடி வைத்துப் பிடிக்கப்பட்ட 4 இலட்சம் ரூபா பெறுமதியான 1300 கிலோகிராம் மீன்களையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..