மாவிலாற்றில் வெருகல் கங்கைக் கதவு மூடப்பட்டது. பல கிராமங்களுக்கு பாதிப்பு. Share

கடந்த ஒருவாரகாலமாக மாவிலாற்றில் வெருகல் கங்கைக் கதவு மூடப்பட்டுள்ளதால் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ்வரும் பல

கிராமங்கள் குடிநீரின்றியும் பயிர்ச் செய்கைக்கான நீரின்றியும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

 

இது விடயமாக நேற்று வியாழக்கிழமை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபருடன் கூட்டம் ஒன்று இடம்பெற்றதாக வெருகல் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் வி. நவநீதன் தெரிவித்தார். வெருகல் கங்கைக்கு நீர் வழங்கும் மாவிலாற்றுக் கதவு கடந்த ஒரு வாரகாலமாக மூடப்பட்டுள்ளதால் வெருகல் கங்கை நீரோட்டமின்றி வரண்டுள்ளது. இதனால் கடல் நீர் வெருகல் கங்கைக்குள் ஊடுருவி கங்கை நீர் உவர் நீராக மாறியுள்ளது.

 

 

இந்த நிலைமை காரணமாக வெருகல் கங்கை நீரை நம்பியிருக்கும் வெருகல், பூநகர், வட்டவான், மாவடிச்சேனை, சேனையூர், முத்துச்சேனை, வெருகல் முகத்துவாரம், சூரநகர், ஆனைத்தீவு போன்ற கங்கைக் கரையோர கிராம மக்கள் குடி நீருக்கும் விவசாயத்துக்கான நீருக்கும் வழியில்லாமல் பாதிக்கப்பட்டுள்னர்.

 

 

வெருகல் கங்கை ஆற்று நீரை நம்பி உப உணவுப் பயிர்ச் செய்கையிலீடுபடும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் வி. நவநீதன் கூறினார். தங்களுக்கு மூன்று மாதகால அவகாசத்தில் வெருகல் கங்கைக்கு நீர் திறந்து விடப்படும் என்று நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே தாங்கள் நிலக்கடலை போன்ற உப உணவுப் பயிர்களைச் செய்யத் தொடங்கியதாகவும் ஆனால் பயிரிட்டு தற்போது இரண்டு மாதங்களாகின்ற வேளையில் இடைநடுவில் கங்கை நீர் தடைப்படுத்தப்பட்டதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கங்கைக்குள் கடல் உவர் நீர் பாய்ந்துள்ளது.

 

 
அதனை அறியாது நீர் பாய்ச்சிய விவசாயிகளின் பயிர்கள் எல்லாம் கருகி விட்டதாக விவசாயிகள் சங்கத் தலைவரும் கிராம முன்னேற்றச் சங்கத் தலைவருமான என். ஞானகணேசன் தெரிவித்தார். வெருகல் கங்கைக்கு வரும் மகாவலி நீர் மாவிலாற்றில் தடைப்பட்டதன் காரணமாக வெருகல் கங்கை நீரை நம்பியிருந்த சுமார் 1500 விவசாயக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 

 
ஆனைத்தீவு கிராம சேவையாளர் பிரிவில் 400 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட நிலக்கடலை, மிளகாய், சோ Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..