இனவாத்ததை தூண்டி அரசியல் பிழைப்பு நடத்த வேண்டாம். சிவசக்தி ஆனந்தனின் கருத்துக்கு கண்டன அறிக்கை Share

இனவாத்ததை தூண்டி அரசியல் பிழைப்பு நடத்த வேண்டாம் என்று வவுனியா மாவட்ட இன நல்லுறவிற்கான ஒன்றியத்தின் தலைவர் அப்துல் பாரி தெரிவித்துள்ளார்.

 

 

 

அமைச்சர் ரிசாத் பதியுதீன் வவுனியா பாரதிபுரத்தில் வசிக்கும் தமிழ் மக்களை வெளியேறுமாறு மிரட்டல் விடுத்தார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் கருத்தானது, இனவாதமே அன்றி வேறொன்றுமில்லை. ஓற்றுமையாக வாழும் தமிழ் முஸ்லிம் மக்களிடையே தயவு செய்து இனவாத்தை தூண்டி அரசியல் பிழைப்பு நடத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுகொண்டுள்ளார்.

 

 

இக் கண்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளதாவது:-

 

 

அமைச்சர் ரிசாத் பதியுதீன் தமிழ், முஸ்லிம் என்ற இன வேறுபாடின்றி அனைவருக்கும் சேவை செய்து வருகின்றார். இதனை சகித்துக் கொள்ள முடியாத சிவசக்தி ஆனந்தன் உட்ப சில தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அமைச்சர் ரிசாத் பதியுதீனை இனவாதியாக காட்டி அரசியல் காய்நகர்த்தல்களை மேற்கொள்கின்றனர்.

 

 

தமிழ் மக்களின் எதிரியாக காட்டுவதன் மூலம் தங்களின் நாடாளுமன்ற கதிரையை பாதுகாக்க முனைகின்றார்.

 

 

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இவர்களால் கிடைத்த நன்மைகள் தான் என்ன? இவர்களால் ஒரு குடிசையைக் கூட கட்டடிக் கொடுக்க முடிந்ததா? அமைச்சர் ரிசாத் பதியுதீன் மீள் குடியேற்ற அமைச்சராக இருந்த போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மூன்று இலட்சம் தமிழ் மக்களை சொந்த இடங்களுக்கு மீள் குடியேற்றம் செய்ததுடன் அம் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளையும் உடனுக்குடன் வழங்கியிருந்ததை பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள்.

அமைச்சர் நினைத்திருந்தால் தான் மீள் குடியேற்ற அமைச்சராக இருந்த போது தனது அதிகார வளத்தை பயன்படுத்தி முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்து அவர்களுக்கு மேலதிக உதவிகளையும் செய்திருக்கலாம் ஆனால், அவர் அப்படி பக்கசார்பாக நடந்து கொள்ளவில்லை.
இன்று மீள் குடியேறியுள்ள தமிழ் மக்கள் வறுமை உட்பட பல துன்பங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். தமது வாழ்வாதாரத்துக்கு தமிழ் தலைவர்கள் உ Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..