ஊடகவியலாளர் சுயமாக செய்தி சேகரிப்பதற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டாம். வடக்கு முதல்வரிடம் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கோரிக்கை. Share

ஊடகவியலாளர் சுயமாக செய்தி சேகரிப்பதற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டாம் என வடக்கு முதல்வரிடம் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கோரிக்கை விடுத்திருக்கின்றது.

 

 

 

ஊடகவியலாளர்கள் செய்திகளைச் சேகரிப்பதற்கு தமது அலுவலகத்துக்கு வரத் தேவையில்லை எனவும், செய்திகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனங்களின் ஆசிரியர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் எனவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்திருக்கின்றமைஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பதை கட்டுப்படுத்தும் ஒரு செயற்பாடு என இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் கே.ஜெயேந்திரன் தெரிவித்துள்ளார்.

 

 

முதலமைச்சரின் குறிப்பிட்ட அறிக்கை தொடர்பில் கவனத்தைச் செலுத்தியிருப்பதாகத் தெரிவித்திருக்கும் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர், முக்கிய சந்திப்புக்கள் இடம்பெறும் போது நேரில் சென்று செய்திகளைச் சுயமாகச் சேகரிப்பதன் மூலமாகவே முழுமையான தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என ஊடகவியலாளர்கள் கருதுகின்றார்கள்.

 

 

இதன் மூலமாகவே மக்களுக்கும் சரியன தகவல்களைக் கொடுக்கக்கூடியதாகவிருக்கும் எனவும் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- “ஏனைய மாகாண சபைகளுடன் ஒப்பிடும் போது வடமாகாண சபை வித்தியாசமானது. மத்திய அரசுடன் முரண்படும் ஒரு மாகாண சபையாகவும் வடமாகாண சபையே இருக்கின்றது. தமிழ் மக்களின் அபிலாஷைகளின் வெளிப்பாடாகவே அது பார்க்கப்படுகின்றது. வடமாகாண சபையில் என்ன நடைபெறுகின்றது என்பதை அறிய மக்கள் ஆவலாக இருப்பதும் அதனால்தான். இந்த நிலையில்தான் வடக்கேயுள்ள ஊடகவியலாளர்கள் முதலமைச்சரை நாடி வருகின்றார்கள். எனவே, இவற்றைக் கவனத்திற்கொண்டு, முக்கியமான சந்திப்புக்கள், ஆலோசனைக் கூட்டங்கள் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் வட மாகாண சபை முதலமைச்சர் ஊடகவியலாளர்களை நேரில் சந்திக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம். போதிய இடவசதி இல்லை என்பதை மட்டும் இதற்கு ஒரு காரணமாகக் கூறாமல், முதலமைச்சர் தமது முடிவை மறுபரிசீலனை செய்து ஊடகவியலாளர்கள் சுயமாக செய்திகளைச் சேகரிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.”- எனவும் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..