கிழக்கு மாகாண கல்வி நிருவாகத்தில் சட்ட ஆட்சியையும் நல்லாட்சியையும் நிலை நிறுத்துமாறு வேண்டுகோள் Share

கிழக்கு மாகாண கல்வி நிருவாகத்தில் சட்ட ஆட்சியையும் நல்லரசாட்சியையும் நிலை நிறுத்துமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் மாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளது

 

.இந்த விடயம் தொடர்பாக மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வந்திருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைச் செயலாளர் மற்றும் உப தலைவர் ஆகியோர் தெரிவித்தனர்.

கடந்த புதன்கிழமை இலங்கை ஆசிரியர் சங்கம் மாகாண ஆளுநரை அவரது திருகோணமலை அலுவலகத்தில் சந்தித்தது.

கிழக்கு மாகாண கல்விப் புலத்தில் சட்ட ஆட்சிக்கு முரணான செயற்பாடுகள் தொடர்வது பற்றித் தாங்கள் ஆளுநரிடம் எடுத்து விளக்கியதாக இலங்கை ஆசிரியர் சங்க மட்டக்களப்புக் கிளைச் செயலாளர் பி.உதயரூபன் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது மட்டக்களப்பு மற்றும் கல்குடா கல்வி வலயங்களில் அதிபர் நியமிப்பு மற்றும் சாதாரண இடமாற்றங்கள் தொடர்பாகவும், உதவிக் கல்விப் பணிப்பாளர் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்கள் நியமனங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் மூதூர் கல்வி வலயப் பணிப்பாளரின் இடமாற்றம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதோடு, முறையான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய கல்வி நிருவாக சேவையைச் சேர்ந்த முதலாந்தர அதிகாரி ஒருவர் விண்ணப்பம் கோரப்படாத நிலையில் நியமிக்கப்பட்டமை தொடர்பாக ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது என்றும் இலங்கை ஆசிரியர் சங்க மட்டக்களப்புக் கிளைச் செயலாளர் பி.உதயரூபன் தெரிவித்தார்.

இதன் போது இலங்கை சனநாயகக் குடியரசின் தாபன விதிக் கோவை மற்றும் சுற்று நிருபங்களை முன்வைத்து ஆதாரங்களுடன் தாங்கள் மாகாண ஆளுநரின் மேலான கவனத்திற்குக் கொண்டு வந்ததாகவும் அவர் கூறினார்.

மேலும் கிழக்கு மாகாணத்தில் சனி, ஞாயிறு தினங்களில் நடைபெறும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயலமர்வுகள் ஆசிரியர்கள் மீது வேலைப்பளுவை அதிகரிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இது தொடர்பாக மாகாண கல்விப் பணிப்பாளரின் கவனத்திற்குத் தான் கொண்டு வருவதாக சங்க உறுப்பினர்களிடம் ஆளுநரால் உறுதியளிக்கப்பட்டது. மேலும் பாடசாலை அபிவிருத்தி சங்கங்களின் ஊடாக மாணவர்களிடம் முறையற்ற விதத்தில் பணம் அறவிடப்படுவதையும் சங்க உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

இது தொடர்பாக உள்ளகக் கணக்காய்வுக்காகவும் நடவடிக்கை எடுப்பதாகவும் ஆளுநரால் உறுதி வழங்கப்பட்டது. இச்சந்திப்பின் போது மாகாண ஆளுநரின் செயலாளர் கே.சிவநாதன், மற்றும் உப செயலாளர் செல்வி.காலிதா மஹ்மூத் ஆகிய Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..