வாக்காளர்களது கவனயீனமே வாக்குரிமையை இழக்க காரணம்-சுட்டிக்காட்டினார் அரச அதிபர் Share

வாக்காளர்களது கவனயீனமே வாக்குரிமையை இழக்க காரணம் என யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.


 
இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற  வாக்காளர் தினத்தன்று விழிப்புணர்வுப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
மேலும் அவர் உரையாற்றுகையில்,
 
வாக்காளர்கள் தமது பெயரினை பதிவு செய்யாமல் தவறு விடுவதால் வாக்குரிமையை இழக்கும் நிலை
உருவாகின்றது.ஆகவே வருடா வருடம் இந்த வாக்காளர் பேரணியை ஏற்படுத்தி வாக்காளர்களுக்கு இதனை நினைவுபடுத்தும் விடயமாக இந்த பேரணி  இடம்பெறவுள்ளது.
 
 
மேலும் வருடா வருடம் ஜீன் 1ம்திகதி இந்த நடவடிக்கை ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.ஆகவே வாக்காளர்கள் தமது பெயரினை ஒவ்வெர்ரு வருடமும் வாக்காளர் இடாப்பில் பதிவு செய்வது அவசியம்.
 
எனவே தமது பெயரினை பதிவு செய்வதற்கான வயது 18. அத்துடன் 18வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கிராம சேவையாளர்கள் ஊடாக தொடர்பு கொண்டு பெயரினை பதிவு செய்யுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com