அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்குமாறு இலங்கையிடம், பிரித்தானியா கோரிக்கை Share

அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்குமாறு இலங்கையிடம் பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது.

மனித உரிமை மேம்பாடு, நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வைத்தல் ஆகியனவற்றுக்கு பிரித்தானியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய அரசியல் பிரிவு பொறுப்பாளர் டெனியல் பாயின்டர் (Daniel Painter) தெரிவித்துள்ளார்.

சுபீட்சாமன இலங்கையை கட்டியெழுப்பு ஒத்துழைப்பு வழங்குவதே பிரிததானியாவின் முதன்மை நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வடக்கில் தேர்தல் நடத்தி மாகாணசபை நிறுவப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் பாரியளவில் உட்கட்டுமான வசதிகள் ஏற்படுத்தப்பட்ட போதிலம், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..