இன்றைய ராசிப் பலன்கள் 01.06.2014 Share

மேஷம்: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடை வீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார்.

சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலை யாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். தைரியம் கூடும் நாள்.

ரிஷபம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். நம்பிக்கைக்குரியவர்கள் சிலர் உதவு வார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

மிதுனம்: இன்றும் இரவு 7.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளை யெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருந்து வீர்கள். குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.


கடகம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவது நல்லது. பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனசை வாட்டும். சகோதர வகையில் பிணக்குகள் வரும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாகப் பேசுங்கள். இரவு 7.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் போராடி வெல்லும் நாள்.


சிம்மம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். சேமிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வீட்டை அழகுப் படுத்துவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.


கன்னி: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். மாறு பட்ட அணுகுமுறையால் இழுபறியாக இருந்து வந்த சிக்கல்களுக்கு விடிவு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.


துலாம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உற்சாகமான நாள்.


விருச்சிகம்: இன்றும் இரவு 7.30 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.


தனுசு: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். வாகனத்தை சரி செய்வீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். இரவு 7.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவ தால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.


மகரம்: குடும்பத்தில் உள்ளவர் களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். நெடுநாட் களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். அமோகமான நாள்.


கும்பம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். அக்கம்- பக்கம் வீட்டாரின் ஆதரவு  பெருகும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். கனவு நனவாகும் நாள்.


மீனம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் ராஜ தந்திரத்தால் லாபத்தை அதிகரிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..