மகனின் இறுதிச்சடங்குக்காக வீட்டுக்கு வந்த இராணுவ வீரர் சுட்டுக்கொலை

மகனின் இறுதிச்சடங்குக்காக வீட்டுக்கு வந்த இராணுவ வீரர் சுட்டுக்கொலை

இராணுவ அதிகாரியாக இருக்கும் முக்தார் அஹ்மது மாலிக், விபத்தில் இறந்த தனது மகனின் இறுதிச்சடங்குக்காக வீட்டுக்கு வந்த நிலையில், பயங்கரவாதிகள் அவரை சுட்டுக்கொன்றுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள ஷுரத் கிராமத்தை சேர்ந்த முக்தார் அஹ்மது மாலிக் இந்திய இராணுவத்தில் லேன்ஸ் நாயக் ஆக பணியாற்றி வந்தார்.

முக்தாரின் மகன் சில நாட்களுக்கு முன் சாலை விபத்தில் உயிரிழந்ததால், விடுப்பு எடுத்துக்கொண்டு தனது கிராமத்திற்கு அவர் திரும்பியுள்ளார்.

இந்நிலையில், நேற்றிரவு முக்தாரை அவரது வீட்டின் அருகே பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இது தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.