முல்லையில் ஏழைப் பெண்களுக்கு வாழ்வு கொடுத்த லண்டன் சைவ முன்னேற்றக் கழகம்.

முல்லைதீவு – தண்ணீரூற்று, ஊற்றங்கரை சித்தி விநாயகர் ஆலயத்தில் வறிய குடும்பத்தை சேர்ந்த 14 இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

முல்லைதீவு – தண்ணீரூற்று, ஊற்றங்கரை சித்தி விநாயகர் ஆலயத்தில் வறிய குடும்பத்தை சேர்ந்த 14 இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

அதில் யுவதிகள் மிகவும் வறுமைக்கு உட்பட்ட நிலையில் தமது திருமணத்தை நடத்த முடியாத நிலையில் இருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் அவர்களின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றமாக இந்த திருமணம் அமைந்துள்ளது.

அகில இலங்கை இந்துமா மன்றத்தினருடன் இணைந்து லண்டன் கிளை சைவ முன்னேற்ற சங்கத்தினரின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நேற்றுக் காலை நடைபெற்றுள்ளது.

சைவ முன்னேற்ற சங்கத்தினரின் 40ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வந்த ஏழு யுவதிகளின் வாழ்வில் ஒளிவீசியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட தம்பதியினரை அகில இலங்கை இந்துமா மன்றத்தின் பிரதம குருக்கள் உள்ளிட்டோர் ஆசிர்வாதத்துள்ளதுடன், அவர்களின் வாழ்வு வளம்பெற லண்டன் கிளை சைவ முன்னேற்ற சங்கத்தினர் மேலும் உதவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.