இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? தினமும் 1 சாப்பிடுங்க… அப்புறம் இதெல்லாம் நடக்கும்நட்சத்திர பழம் என்பது அதிக ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய ருசியான பழ மாகும். இந்த பழத்திற்கு வெவ்வேறு பெயர்கள் இருக்கிறது.


நட்சத்திர பழம் என்பது அதிக ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய ருசியான பழ மாகும். இந்த பழத்திற்கு வெவ்வேறு பெயர்கள் இருக்கிறது.

இந்தி மொழியில் கம்ரக் என்றும், மராத்தி மொழியில் கர்ம்பால், வங்காள மொழியில் கம்ராங்கா மற்றும் கம்பம்பொலா என்றும் நம்ம தமிழ் மொழிய தம்பரத்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

சுவை

இது சாப்பிடுவதற்கு இனிப்பு மற்றும் புளிப்பு சுவையுடன் இருக்கும். இதன் வடிவம் 5 முகப்புகளைக் கொண்ட நட்சத்திர வடிவில் காணப்படும். இது பார்ப்பதற்கு கண்ணை பறிக்கும் அழகான மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதை அப்படியே தோலுடனே சாப்பிட முடியும். இதில் இரண்டு வகையான பழங்கள் உள்ளன. ஒன்று பார்ப்பதற்கு பெரிதாக இனிப்பு சுவையுடனும் மற்றொன்று சிறியதாக புளிப்பு சுவையுடனும் காணப்படும்.

கிடைக்கும் காலங்கள்
இனிப்பு சுவை உடைய பழம் கோடை மற்றும் மழைக் காலங்களில் கிடைக்கும். புளிப்பு சுவை உடைய பழம் கோடை காலத்தின் முடிவில் தொடங்கி குளிர்காலத்தின் நடுப்பகுதி வரை கிடைக்கும்.

ஊட்டச்சத்து அளவுகள்
100 கிராம் நட்சத்திர பழத்தில்
34.4 மில்லி கிராம் விட்டமின் சி
1 கிராம் புரோட்டீன்
133 மில்லி கிராம் பொட்டாசியம்
10 மில்லி கிராம் மக்னீசியம்
2மில்லி கிராம் சோடியம்
61IU அளவு விட்டமின் ஏ
3 மில்லி கிராம் கால்சியம்
0.1 மில்லிகிராம் இரும்புச் சத்து
நார்ச்சத்து
7 கிராம் கார்போஹைட்ரேட்
31 கலோரிகள்(குறைந்த கலோரியை கொண்டது)
இதைத் தவிர்த்து இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், பாலிபினாலிக், காலிக் அமிலம், க்யூயர்சிடின்., எபிகேட்டசின் போன்ற பொருட்கள் அடங்கியுள்ளன.

நன்மைகள்
புற்று நோயை தடுத்தல்
நட்சத்திர பழம் புற்று நோயை தடுக்கிறது என்று நிறைய ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. இதிலுள்ள பாலிபினோலிக் செல்களில் ஏற்படும் மியூட்டோஜெனிக் விளைவை தடுத்து கல்லீரல் புற்று நோய் போன்றவை வராமல் தடுக்கிறது. மேலும் இதில் அதிகளவில் நார்ச்சத்து இருப்பதால் குடலை சுத்தப்படுத்தி குடல் புற்று நோய் வருவதை தடுக்கிறது.

அற்புத வணிகஒப்பந்தம் இந்த வெள்ளியுடன் முடிகிறது.உடனே வாங்கு.
புதிய ஸ்மார்ட்போன் வாங்க பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஞ் செய்க
Flipkartல் ஒவ்வொரு வீட்டிற்கும் ஏற்ற பட்ஜெட்டில் பொருட்கள்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்
இதில் அதிகளவில் விட்டமின் சி இருப்பதால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் காய்ச்சல், இருமல், அல்சர், தொண்டை புண் போன்றவற்றை குணப்படுத்துகிறது. எனவே காலையில் உங்கள் ஸ்மூத்தியுடன் இந்த நட்சத்திர பழத்தையும் சேர்த்து குடித்து வந்தால் உங்களின் வெள்ளை அணுக்கள் அதிகமாகி நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இதய ஆரோக்கியம்
நட்சத்திர பழத்தில் அதிகளவில் பொட்டாசியம், சோடியம் இருப்பதால் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கிறது. இதனால் இதய நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது. இதயத் துடிப்பு, ஆரோக்கியமான இரத்த ஓட்டம் இருப்பதால் இதயமும் ஆரோக்கியமாக செயல்படும்.

எடை இழப்பு

இது வெறும் 31 கலோரிகளை க் கொண்டு இருப்பதால் உங்கள் எடை குறைக்கவும் உதவுகிறது. நார்ச்சத்து அதிகம் இருப்பதால் வயிறு நிரம்பின எண்ணத்தை தருகிறது. உங்கள் மெட்டா பாலிசத்தை அதிகரித்து தேவையற்ற கலோரிகளை எரித்து எடை குறைப்பை எளிதாக்குகிறது.

சீரண சக்தியை அதிகரித்தல்
நார்ச்சத்து தான் நமது குடல் மண்டலம் ஆரோக்கியமாக செயல்பட உதவுகிறது. இந்த நார்ச்சத்து நமது சீரண சக்தியை அதிகரிப்பதோடு மலச்சிக்கல், வலி, வயிற்றுப் போக்கு, வயிறு உப்புசம் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் உணவில் உள்ள விட்டமின்கள், தாதுக்கள் போன்றவற்றை குடல் உறிஞ்சி கொள்ள உதவுகிறது. மேலும் இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் வயிற்று புற்று நோய் வருவதை தடுக்கிறது.

சரும பிரச்சினைகள்
இந்த நட்சத்திர பழத்தில் ஆன்டி மைக்ரோபியல், அழற்சி எதிர்ப்பு பொருள்கள் போன்றவை உள்ளன. இதனால் சரும நோய்களான டெர்மட்டிஸ், எக்ஸிமா போன்றவற்றை குணப்படுத்துகிறது. எக்ஸிமா என்பது நோயெதிர்ப்பு மண்டலத்தின் அசாரண செயல்பாடு ஆகும். வறண்ட சருமம் மற்றும் பாக்டீரியா சருமத்தில் ஏற்படுகிறது. எனவே இதை தவிர்க்க நட்சத்திர பழத்தை சாப்பிட்டாலே போதும்.

நீரிழிவு நோய்க்கு இது சிறந்த மருந்தாகும். இதிலுள்ள நார்ச்சத்துகள் உணவு உண்ட பின்பு குளுக்கோஸ் அளவை மெது மெதுவாக இரத்தத்தில் கலக்கிறது. மேலும் இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைத்து நீரிழிவு நோய் தீவிரம் ஆகுவதை தடுக்கிறது