சிறுநீர் கழிக்கச் செல்வதாகக்கூறி உயிரை மாய்த்த பாதாள உலக குழுவின் உறுப்பினர்

கந்தானை- வெலிகம்பிட்டி பிரதேசத்தில் பெண்ணொருவரைச் சுட்டுக்கொலை செய்த குற்றச்சாட்டின் பிரதான சந்தேக நபர் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

கந்தானை- வெலிகம்பிட்டி பிரதேசத்தில் பெண்ணொருவரைச் சுட்டுக்கொலை செய்த குற்றச்சாட்டின் பிரதான சந்தேக நபர் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை குறித்த சந்தேக நபர் அநுராதபுரத்திலிருந்து கைது செய்யப்பட்டு பேலியகொடைக்கு கொண்டுவரும்போது, தண்டுகம ஓயாவில் பாய்ந்து தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அமுனுகம சஞ்ஜீவ என அழைக்கப்படும் குறித்த சந்தேக நபர் பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்படும் போது சிறுநீர் கழிக்க வேண்டுமென பொலிஸாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பல தடவைகள் அவர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, வாகனத்தை நிறுத்தி ஜா-எல தண்டுகம பிரதேசத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதன்போது குறித்த சந்தேக நபர் பொலிஸ் அதிகாரி ஒருவரைத் தாக்கிவிட்டு அருகில் இருந்த ஓயாவில் பாய்ந்துள்ளார்.

சந்தேக நபரை மீட்ட பொலிஸ் ராகம மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். எனினும் சந்தேக நபர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.சடலம் ராகம மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த சந்தேக நபர், சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கனேமுல்ல சஞ்சீவ என்ற பாதாள உலக குழு தலைவரின் பிரதான உதவியாளர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.