இளநீருக்குள் மயக்க மருந்து !! ஆட்டோச் சாரதி ஜெயசீலன் அலங்கோலம்!!

இளநீருக்குள் மயக்க மருந்து !! ஆட்டோச் சாரதி ஜெயசீலனுக்கு நடந்த அலங்கோலம்!!

கல்முனையை சேர்ந்த ஆட்டோ சாரதியான ஜெயசீலன்(51வயது) வழமை போல கல்முனை தரவைச்சித்தி பிள்ளையார் கோயில் முன்பாக தமது ஆட்டோவை சவாரிக்காக காத்திருந்துள்ளார்.

அப்போது மாலை 5.30மணியளவில் இரு  நபர்கள் காத்தான்குடி செல்லவிருப்பதாக கூறி 1500ரூபா சவாரிக்காக போக்குவரத்துச் செலவை ஒத்துக்கொண்டு கல்முனையிலிருந்து காத்தான்குடி நோக்கி பயணமாகியுள்ளார்கள்.

ஆட்டோ மண்முனையை நெருங்கும் இடைநடுவில் இளநீர் குடிப்பதற்காக இறங்கியுள்ளார்கள்.

அத்தோடு ஆட்டோ சாரதிக்கும் இளநீர் வாங்கிக் கொடுத்துள்ளார்கள்.

அந்த இளநீரை பருகிய சாரதிக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவரை மண்முனை பாலப்பக்கமாக அழைத்துச் சென்றவர்கள் அவரிடமிருந்த ஒன்றரை பவுண் தங்கமாலை ,பணம் என்பவற்றை கொள்ளையடித்துக் கொண்டு காத்தான்குடியில் ஆட்டோ உடன் இடையில் மயக்கத்துடன் சாரதியையும் விட்டுத்து தப்பிச்சென்றுள்ளார்கள்.

அவ்வழியால் சென்றவர்கள் தகவலுக்கமைய காத்தான்குடி போலிசாரால் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு உறவினர்களுக்கு தகவல் அனுப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து உணர்வற்ற நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றார்.

குறித்த சாரதி தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை.

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு களுவாஞ்சிக்குடி முச்சக்கர வண்டி சாரதிக்கும் இளநீரில் மயக்கமருந்து கலந்து பணம், தங்க ஆபரணங்கள் கொள்ளையடித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.