சரவணபவன் வைத்த தண்ணீர்ப் பார்ட்டி!! தவழ்ந்து திரிந்த அதிகாரிகள்!! நடந்தது என்ன?

சரவணபவன் வைத்த தண்ணீர்ப் பார்ட்டி!! தவழ்ந்து திரிந்த அதிகாரிகள்!! நடந்தது என்ன?

கடந்த வாரம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபயகுணவர்த்தன. அப்போது அவருக்கு பெருமெடுப்பில் மதுபான விருந்தளித்தார். அந்த விருந்தில் பலதுறைகளை சேர்ந்த அரச அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர். இரவிரவாக நடந்த அmந்த விருந்தின் முடிவில் நடந்து வந்த அதிகாரிகள் பலர் தவழ்ந்தபடியே வீடு போய் சேர்ந்தனர்!

அமைச்சர், முக்கிய அதிகாரிகள் பங்குபற்றிய அந்த மதுபான விருந்து விபரத்தை தமிழரசுக்கட்சியின், சரவணபவன் எதிர்ப்பு அணியை சேர்ந்த ஒருவர் – உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்- முகப்புத்தகத்தில் எழுதியிருந்தார். அவரே சில இணையத்தளங்களிற்கும் தகவலையும், சில படங்களையும் லீக் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தியடைந்த சரவணபவன், தகவலை லீக் செய்த தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கட்சியின் தலைவர் மாவை  சேனாதிராசாவிடமும் வலியுறுத்தியிருந்தார். இதற்கு கட்சி தரப்பிலிருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், நேற்றும் இன்றும் (06, 07) தமிழரசுக்கட்சியின் யாழ்ப்பாண உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலை தமிழரசுக்கட்சி தலைமை நடத்தியது. இந்த கூட்டத்திலேயே களேபரம் இடம்பெற்றதை தமிழ்பக்கம் அறிந்துள்ளது.

இன்றைய கலந்துலையாடலிற்கு மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சரவணபவன், கனகசபாபதி ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில் கருத்துரைத்த சரவணபவன்- “நான் மதுபான விருந்தளித்ததாக எமது கட்சியை சேர்ந்த ஒருவரே முகப்புத்தகத்தில் எழுதினார். இணையத்தளங்களிற்கும் செய்தி கொடுக்கப்பட்டிருந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கட்சியை கோரியிருந்தேன். எதுவும் நடக்கவில்லை. விரைவில் கொழும்பு செல்லும்போது, பொலிஸ்மா அதிபரை சந்தித்து, அவர் மீது நடவடிக்கையெடுக்கும்படி முறைப்பாடு செய்வேன்“ என்றார்.

சரவணபவனின் கருத்து அங்கு பெரும் சரச்சையை தோற்றுவித்தது. மாவை சேனாதிராசா, சுமந்திரன், கனகசபாபதி ஆகியோர் சரவணபவனின் கருத்தை எதிர்த்தனர்.

மதுபான விருந்தளித்தது தவறான நடவடிக்கையென கூட்டாக வலியுறுத்தினர். “தேவையெனில் அமைச்சருக்கு மட்டும் தனியாக விருந்தளித்திருக்கலாம். ஆனால், அதிகாரிகளையும் அழைத்து மதுபான விருந்தளித்தது மிகப்பிழையானது. பிழையை செய்து விட்டு, அதை சுட்டிக்காட்டியவர் மீது எப்படி முறைப்பாடு செய்யலாம்?“ என அவர்கள் கேள்வியெழுப்பினர்.

“அது நான் தேவை கருதி ஏற்பாடு செய்த விருந்து. எனது சில வியாபார நடவடிக்கைகளை செய்விக்க இப்படியான விருந்துகள் தேவை. இப்படியான விருந்துகள் மூலம் அதிகாரிகளை கைக்குள் வைத்திருந்தால்தான், எதையும் செய்விக்கலாம். இதில் யாரும் தலையிட வேண்டாம்“ என கறாராக குறிப்பிட்டார்.

இதன்போது குறுக்கிட்ட எம்.ஏ.சுமந்திரன், “தமிழரசுக்கட்சியின் யாப்பில் புகைத்தலே கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. புகைத்தலையே தடுக்கும் கட்சி, மதுபான விருந்தை ஏற்றுக்கொள்ளுமா? நீங்கள் கட்சியின் யாப்பையே மீறியிருக்கிறீர்கள்“ என்றார்.

சரவணபவன் செய்தது பிழையான நடவடிக்கை என்பதை மாவை, கனகசபாபதியும் தொடர்ந்து வலியுறுத்தினர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பான நிலைமை காணப்பட்டது.

இந்த சம்பவத்தால் அதிருப்தியடைந்த சரவணபவன், அதன்பின்னர் இறுகிய முகத்துடனேயே உட்கார்ந்திருந்தார்.

அந்த சந்திப்பு முடிந்த பின்னர் வேகமாக வெளியில் வந்த சரவணபவனை, அவருக்கு நெருக்கமான சில உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சூழ முயன்றனர். இதன்போது சற்று கோபமாக- “நான் வைச்ச ட்ரிங்ஸ் பார்ட்டியால கட்சி கட்டுப்பாட்டை மீறிவிட்டன் என்று கதைக்கிறதுக்கு முதல், எம்பஸிகளின் பார்ட்டிகளை போய் பார்க்க சொல்லுங்கோ. அங்க தலைவர் (சம்பந்தன்) இருக்கிற கோலத்தை பார்த்திட்டு என்னோட கதைக்க சொல்லுங்கோ“ என்றுவிட்டு கிளம்பி சென்றார்.