சாதிவெறியின் உச்சம்; சிறுமியை மரத்தில் கட்டிவைத்து சரமாரியாக தாக்கிய தந்தை,மற்றும் கிராமத்து மக்கள்

பீகார் மாநிலத்தில் வேறு சாதி வாலிபருடன் ஓடிப்போனதற்கு தண்டனையாக சிறுமியை சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது

பீகார் மாநிலத்தில் வேறு சாதி வாலிபருடன் ஓடிப்போனதற்கு தண்டனையாக சிறுமியை சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பீகார் மாநிலம் நவாடா பகுதியை சேர்ந்த சிறுமி வேறு சாதி வாலிபரை காதலித்தாள். அதை அறிந்த பெற்றோர் அவளை கண்டித்தனர்.

இந்த நிலையில் அவள் வீட்டை விட்டு வெளியேறி தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தாள். இதனால் ஆத்திரம் அடைந்த அவளது தந்தையும் ஜோகியா மாரன் கிராம மக்களும் சேர்ந்து அந்த சிறுமியை கண்டுபிடித்தனர்.

பின்னர் கிராமத்தினர் கூடி கட்ட பஞ்சாயத்து பேசினர். முடிவில் அந்த சிறுமியை ஒரு மரத்தில் கட்டி வைத்து, வேறு சாதி வாலிபருடன் ஓடிப்போனதற்கு தண்டனையாக சிறுமியை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் வேதனை என்னவென்றால் கிராம மக்களுடன் சிறுமியின் தந்தையும் அவளை தாக்கினார்.

இது பற்றிய தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர்கள் விரைந்து வந்து கிராமத்தினரின் பிடியில் இருந்து 5 மணி நேரத்துக்கு பிறகு சிறுமியை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.