இன்று நள்ளிரவு 12 மணியுடன் மத்திய மாகாண சபையின் பதவிக்காலம் நிறைவு….!

மத்திய மாகாண சபையின் பதவிக்காலம் இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவடையவுள்ளமையால், சபையின் நிர்வாகத்தை ஆளுநரிடம் கையளிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


மத்திய மாகாண சபையின் பதவிக்காலம் இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவடையவுள்ளமையால், சபையின் நிர்வாகத்தை ஆளுநரிடம் கையளிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் எதிர்வரும் 10ஆம் திகதி வட மேல் மாகாணத்தினதும் எதிர்வரும் 25ஆம் திகதி வட மாகாணத்தினதும் பதவிக்காலம் நிறைவடையவுள்ளதாகவும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

தென் மாகாண சபை மற்றும் மேல் மாகாண சபைகளின் பதவிக்காலம் எதிர்வரும் ஏப்ரல் 10 திகதி மற்றும் 21 ஆம் திகதிகளில் நிறைடையவுள்ளதுடன், ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் எதிர்வரும் செப்டெம்பர் 8ஆம் திகதி நிறைவடையவுள்ளதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இருப்பினும், மாகாண சபை எல்லை நிர்ணய மீளாய்வுக் குழுவின் அறிக்கை தொடர்பாக எதனையும் தற்போது வெளியிட முடியாதெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.இதேவேளை வட மத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் பதவிக்காலம் கடந்த வருடம் செப்டெம்பர் மாதத்துடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.