ஜனாதிபதி மைத்திரி சீஷெல்ஸ் தீவுகளுக்கு இன்று உத்தியோகபூர்வ விஜயம்….!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சீஷெல்ஸ் நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று  சீஷெல்ஸ் நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

சீஷெல்ஸ் ஜனாதிபதி டெனி போவின் அழைப்பின் பேரில் அவர் அங்கு பயணித்துள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியுடன் மேலும் 18 பேர் கொண்ட குழுவினர் இவ்விஜயத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இன்று (08) அதிகாலை 2.10 மணியளவில், ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL 707 எனும் விமானத்தின் மூலம் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து அவர்கள் புறப்பட்டனர்.

இதேவேளை கடந்த புதன்கிழமை (03) நோர்வே புறப்பட்ட பிரதமர் தலைமையிலான தூதுக்குழுவினர், நாளை மறுதினம் (10) நாடு திரும்பவுள்ளனர்.