வவுனியாவில் இராணுவத்தின் ரக் மோதியதால் நடந்த சம்பவம்!!

வவுனியாவில் இராணுவத்தின் ரக் மோதியதால் நடந்த சம்பவம்!!

வவுனியா தாண்டிக்குளத்தில் இராணுவ லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியதில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை வீரபுரத்தில் இருந்து ஒமந்தை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் தாண்டிக்குளம் பகுதியில் கொக்கெலிய முகாமில் இருந்து இராணுவத்தினரை ஏற்றி வந்த லொறியுடன் மோதியே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த அன்ரணி யோகேஸ்வரன் அனுஸாந்தன் (வயது 25), அனுஸாந்தன் பவித்திரா (வயது 18) ஆகிய இருவரும் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இவ் மோட்டார் சைக்கிளினை தாண்டிக்குளம் சந்தியில் கடமையில் ஈடுபட்ட போக்குவரத்து பொலிஸாரினால் சைகை செய்யப்பட்ட போது அதனைப் பொருட்படுத்தாமல் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணை வவுனியா பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.