யாழில் நடந்த பாரிய சுற்றிவளைப்பு தேடுதல்!! ஆவா குழுவின் திருவிளையாடல்!!

9 வருடங்களின் பின் யாழில் நடந்த பாரிய சுற்றிவளைப்பு தேடுதல்!! ஆவா குழுவின் திருவிளையாடல்!!

யாழ். குடா நாட்டில் சட்டம் ஒழுங்கைக் சீர்க்குலைக்கும் சந்தேகநபர்களை கைது செய்யும் நோக்கோடு, கொக்குவில் பகுதி சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வர்ணசூரியவின் தலைமையில், இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வன்முறைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மறைந்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் குறித்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய பொலிஸ் நிலையங்களில் இருந்து விசேட பொலிஸ் அணியினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

யாழ். குடா நாட்டில் சட்டம் ஒழுங்கைக் சீர்க்குலைக்கும் சந்தேகநபர்களை கைது செய்யும் நோக்கோடு, கொக்குவில் பகுதி சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

அத்தோடு பொதுமக்களின் அன்றாட செயற்பாடுகளுக்கு பாதிப்பில்லாத வகையில், சில வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டதோடு, சந்தேகமான முறையில் நடமாடுபவர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இளைஞர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.