மட்டக்களப்பு பொலிஸ் அதிகாரி குடும்பப் பெண்ணுடன் லீலை!! இளைஞர்கள் சுற்றி வளைத்து தாக்குதல்!!

மட்டக்களப்பு பொலிஸ் அதிகாரி குடும்பப் பெண்ணுடன் லீலை!! இளைஞர்கள் சுற்றி வளைத்து தாக்குதல்!!

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் சாஜன் ஒருவர் குடும்ப பெண் ஒருவருடன் தகாதமுறையில் நடந்து கொண்டதையடுத்து அவரை தற்காலிகமாக கடமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த பொலிஸ் நிலையத்தில் குற்றத்தடுப்பு பிரி பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்த பொலிஸ் சாஜன் வவுணதீவு கரவெட்டி பிரதேசத்தில் கணவன் கொழும்பிற்கு வேலைக்குச் சென்ற சமயம் குடும்பப் பெண் ஒருவருடன் தகாத உறவு வைத்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2 ஆம் திகதி இரவு பொலிஸ் சாஜன் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்ற நிலையில் பிரதேச மக்கள் குறித்த வீட்டைசுற்றிவளைத்து இருவரையும் பிடித்து நய்யப்புடைப்பு செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து குறித்த பொலிஸ் சாஜன் பொலிஸ் ஒழுக்க விதிமுறைகளை மீறி செயற்பட்ட காரணத்தையிட்டு அவரை உடனடியாக தற்காலிகமாக கடமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக எல்லாளன் சமூக விழிப்புணர்வு இளைஞர்களால் பதியப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.