வைரமுத்து என்னையும் பாலியல் ரீதியில் தொந்தரவு செய்தார்!! மீண்டும் ஒரு பாடகி பரபரப்பு தகவல்!!

வைரமுத்து என்னையும் பாலியல் ரீதியில் தொந்தரவு செய்தார்!! மீண்டும் ஒரு பாடகி பரபரப்பு தகவல்!!

கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்து தமக்கு பாலியல் ரீதியிலான தொந்தரவுகள் கொடுத்ததாக பகீர் தகவலை வெளியிட்டுள்ளார் பிரபல பாடகியான சின்மயி.

பெண்கள் தங்களது அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியிலான தொந்தரவுகளை வெளிப்படுத்துவதற்காக, அவை குறித்து விவாதிப்பதற்காக இணையத்தில் mee too என்ற பரப்புரை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்த பரப்புரையில் உலகளாவிய புகழ் பெற்ற பெண்களும் கூட தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகள் வெளிப்படுத்திவருகின்றனர். அவை கேட்போர்களை அதிர்ச்சியடைய செய்பவையாகவும் உள்ளது.

அந்த வகையில், "தமிழ்த்திரைப்பட பாடலாசிரியராக வைரமுத்து தனக்கு பாலியல் ரீதியிலான தொந்தரவுகளை அளித்ததாகவும், தான் மட்டுமின்றி இன்னும் பல பெண்கள் அவரால் பாதிப்பினுக்கு ஆளாகியுள்ளதாகவும், இந்த விவகாரம் குறித்து பேசுவதால் தங்களுக்கு ஏதேனும் தீங்கு நேருமோ என்றே அவர்கள் இந்த விவகாரத்தை பேச அஞ்சுவதாகவும்" வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார் பாடகி சின்மயி.

சுவிட்சர்லாந்து நாட்டில் கலந்துகொண்ட நிகழ்ச்சியின் போதே தமக்கு வைரமுத்து பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிவித்துள்ளார் சின்மயி.

(இந்த விவகாரம் தொடர்பாக வைரமுத்து தரப்பினர் தங்களது கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால் அவையும் பரிசீலனைக்கு பின்னர் வெளியிடப்படும்)