பெற்றோலின் விலை 155 ரூபாவாக அதிகரித்தது!!

பெற்றோலின் விலை 155 ரூபாவாக அதிகரித்தது!!

எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டு, இன்று நள்ளிரவு முதல்  அமுல்படுத்தப்படுவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி பெற்றோல் 92 ஆறு ரூபாயாலும், பெற்றோல் 95 எட்டு ரூபாயாலும், சுப்பர் டீசல் எட்டு ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோல் 92 – 155 ரூபாய்

பெற்றோல் 95 – 169 ரூபாய்

சுப்பர் டீசல் – 141 ரூபாய்