பப்புவா நியுகினி மற்றும் இந்தோனேசியா பாலித்தீவுகளில் மோசமான நிலநடுக்கம்!!

பப்புவா நியுகினி மற்றும் இந்தோனேசியா பாலித்தீவுகளில் மோசமான நிலநடுக்கம்!!

கடந்த வாரம் இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவானது. இதனால், சுனாமி ஏற்பட்டது.

இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையிலேயே இன்று அதிகாலை பப்புவா நியூகினியாவில் மோசமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளது. அதிக அளவில் வீடுகள் காணப்படும் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரபோல் நகரத்திகிருந்து 200 கிலோ மீற்றர் தூரத்தில் கடலுக்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக எவ்வாறான பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்த தகவல் இன்னமும் வெளியாகவில்லை. உயிரிழப்புக் குறித்தும் இன்னும் தகவல் வெளியாகவில்லை.

பப்புவா நியூகினியா கடல்பகுதியிலும் அதனை ஒட்டிய சாலமன் கடல் பகுதியிலும் சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.