குழந்தை பேற்றிற்காக வைத்தியசாலையிலுள்ள மனைவியை பார்க்க விரைந்த பொலிசார் நடுவீதியில் பலியான சோகம்!!

அநுராதபுரம் – நொச்சியாகம, லிந்தவெவ 30 தூண் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அநுராதபுரம் – நொச்சியாகம, லிந்தவெவ 30 தூண் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்றிரவு 10 மணியளவில் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் வவுனியா ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் கடமை புரிந்தவரும் லிந்தவெவ, 30ஆம் தூண் பகுதியை வசிப்பிடமாக கொண்ட 29 வயதான புத்திக ஹர்சன என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார்.

பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது மனைவியை பார்க்க குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஓமந்தையில் இருந்து வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த போதே விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய நபர் காருடன் தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவம் குறித்து நொச்சியாகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.