இன்று கரையை கடக்கிறது டிட்லி புயல்.. ஒடிசா, ஆந்திராவில் கனமழை பெய்யும்

புவனேஷ்வர்: மிகவும் வலுவான நிலையை எட்டி இருக்கும் டிட்லி புயல் இன்று கரையை கடக்கிறது

புவனேஷ்வர்: மிகவும் வலுவான நிலையை எட்டி இருக்கும் டிட்லி புயல் இன்று கரையை கடக்கிறது.

மத்திய வங்க கடலில் நிலைகொண்டிருக்கும் டிட்லி புயல் மிகவும் மோசமான புயலாக உருவெடுத்து உள்ளது. இந்த புயல் காரணமாக இன்று ஆந்திரா மற்றும் ஒடிசாவில் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

இந்த புயல் ஒடிஷா அருகே கரையைக் கடக்கவிருப்பதால் அம்மாநிலத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோபால்பூர் – வடக்கு ஆந்திரா இடையே கரையை கடக்கிறது.

125 கி.மீட்டர் வேகத்தில் புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஒடிஷாவில் இருந்து 320 கிலோ மீட்டர் தூரத்தில் தற்போது இந்த புயல் நிலை கொண்டு இருக்கிறது.

இதனால் ஒடிசாவிற்கு ரெட் அலெர்ட் விடப்பட்டுள்ளது. ஒடிசா மற்றும் ஆந்திராவில் மிக அதிக கனமழை பெய்யும். கடந்த இரண்டு நாட்களாக அங்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் மீனவர்கள் வங்க கடலில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆந்திரா மற்றும் ஒடிஷாவின் கடலோர மாவட்டங்கள், சென்னையின் எல்லை ஆகிய இடங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று கூறப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இதுவரை 1 லட்சம் மக்கள் பாதுகாப்பு முகாம்களில் ஒடிசாவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.