மும்தாஜ் ஆர்மி – திரளான நடிகைகள் பங்கேற்பு

மும்தாஜ் ஆர்மி – திரளான நடிகைகள் பங்கேற்பு

மும்தாஜ் ஆர்மி ஏற்பாடு செய்துள்ள ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகை மும்தாஜ் உள்பட ஏராளமான நடிகைகள் கலந்து கொள்கிறார்கள்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிகழ்ச்சியில் மமதி, அனந்த் வைத்தியநாதன், மும்தாஜ், பொன்னம்பலம், பாலாஜி, ஜனனி, ரித்விகா உள்ளிட்ட 16 பேர் போட்டியாளர்களாக பங்கேற்றனர். இதில் 80 நாட்களுக்கும் அதிகமாக பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக தங்கியிருந்த மும்தாஜ் கடந்த வாரம் மக்களின் வாக்குகள் மூலம் வெளியேற்றப்பட்டார்.

ஆனால், அவர் வீட்டில் தங்கியிருந்த நாட்களில் அவரது செயல்பாடுகள் ரசிகர்கள் பலரையும் கவர்ந்திருந்தன. இதன் வெளிப்பாடாக சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் ´மும்தாஜ் ஆர்மி´ என்ற பக்கத்தை தொடங்கினர்.

இந்த சமூகவலைதள பக்கத்தில் ரசிகர்கள் ஒருவரையொருவர் நேரடியாக பார்த்துக் கொண்டதில்லை என்று கூறுகிறார் மும்தாஜ் ஆர்மியின் ஒருங்கிணைப்பாளர் வினோத். மும்தாஜ் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதும் சமூக வலைதளங்களின் வாயிலாக ரசிகர்களைச் சந்திக்கும் ஏற்பாட்டையும் இவர்கள் செய்துள்ளனர்.