கம்போடியாவின் கண்ணி வெடி அகற்றும் பிரிவினர் இன்று முகமாலைக்கு விஜயம்

கம்போடியா கண்ணி வெடி அகற்றும் பிரிவினர் கிளிநொச்சி முகமாலை பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.

தேசிய கண்ணிடி வெடி அகற்றும் நிலையத்தின் ஏற்பாட்டில் இன்று காலை ஒன்பது மணியளவில் ஒன்பது பேர் அடங்கிய குழுவினர் முகமாலையின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று கண்ணி வெடி அகற்றும் பணிகளை பார்வையிட்டுள்ளனர்.கம்போடியா உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக அதிகளவு கண்ணி வெடி அபாயம் நிறைந்த நாடாக காணப்படுகின்றது.  இதனால், இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வெற்றிகரமான கண்ணி வெடி அகற்றும் செயற்பாடுகளை பார்வையிடுவதற்காக குறித்த குழுவினர் வருகை தந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *